Aran Sei

மின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நான்கு நாட்கள் போராட்டம் – இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு

மின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நான்கு நாட்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக மின்துறை அதிகாரிகளும், பொறியாளர்களும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அகில இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு (AIPEF) தலைவர் ஷைலேந்திர துபே, “தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்   மின்சார சட்ட [திருத்த] மசோதா நிறைவேற்ற முயலும் அரசின் ஒருதலை பட்சமான  அறிவிப்புக்கு  எதிராக   ஒருங்கிணைந்த மின்துறை அதிகாரிகள் மற்றும்  பொறியாளர்கள்  கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

மேலும், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு ஆகிய மண்டல ஊழியர்கள் முறையே ஆகஸ்ட் 3,4,5,6 ஆகிய நான்கு நாட்களில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்  என்றும்  ஷைலேந்திர துபே கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, “மின்சார சட்ட [திருத்த] மசோதாவில் கூறப்பட்டுள்ள பல சட்டங்கள் மக்களுக்கும், மின்துறை தொழிலாளர்களுக்கும்   எதிராக உள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றும் அகில இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு (AIPEF) தலைவர் ஷைலேந்திர துபே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெல்லியில் 15 லட்சம் ஊழியர்கள் பங்கு பெரும் போரட்டத்தைத் தொடர்ந்து  ஆகஸ்ட் 1௦ அன்று நாடு தழுவிய அளவில்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் ஷைலேந்திர துபே கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்