Aran Sei

மத அடிப்படையில் மக்கள்தொகை கட்டுப்பாடு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்

த அடிப்படையில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அக்டோபர் 4 அன்று நடைபெற்ற தசரா பேரணியில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “மக்கள் தொகை பெருக வளங்கள் தேவை. வளங்களை உருவாக்காமல் மக்கள் தொகை மட்டும் அதிகரித்தால் அது நாட்டுக்கு பெரிய சுமையாகிவிடும். மக்கள் தொகையை ஒரு சொத்தாக கருதும் மற்றொரு பார்வை நம் நாட்டில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மதரஸாவுக்கு செல்லும் மோகன் பகவத் குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை சந்தித்து அவருக்கு நீதி வழங்குவாரா? – ஒவைசி கேள்வி

மேலும், இந்த 2 அம்சங்களையும் மனதில் வைத்து அனைவருக்கும் பொருத்தமான மக்கள் தொகைக் கொள்கையைக் கொண்டு வர வேண்டும். அதாவது, அனைத்து சமூகங்களுக்கும் சமமாகப் பொருந்தக் கூடிய பரந்த மக்கள்தொகைக் கொள்கை உருவாக்கப்படவேண்டும். மத அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு என்பது புறக்கணிக்கக் கூடாத ஒரு முக்கிய விஷயமாகும் என்று கூறியுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டில் மக்கள்தொகையில் இனங்களுக்கு இடையே தோன்றிய ஏற்றத்தாழ்வின் விளைவாக கிழக்கு திமோர், தெற்கு சூடான் மற்றும் கொசோவோ ஆகிய 3 புதிய நாடுகள் தோன்றின. ஆகவே மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு புவியியல் எல்லைகளில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இது பாலியல் வன்புணர்வு, பேராசை உள்ளிட்ட பல பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா அகண்ட பாரதமாக மாறும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து

இந்து என்ற வார்த்தையை சிலர் எதிர்க்கின்றனர், வேறு வார்த்தைகளைப் பயன்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். கருத்து தெளிவுக்காக, இந்து என்ற சொல்லை வலியுறுத்திக் கொண்டே இருப்போம் என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

Source : the hindu

Vetrimaaran attacks bjp & rss along with thirumavalavan | raja raja chozhan issue | Deva’s Update 35

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்