Aran Sei

மகாராஷ்டிராவில் 8 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி – 24 பேரைக் கைது செய்த காவல்துறையினர்

காராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 15 வயது சிறுமியை 8 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய புகார் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 33 பேரில் 2 மைனர்கள் உள்ளிட்ட 24 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் புகாரின் அடிப்படையில், டோம்பிவ்லி பகுதியின் மன்படா காவல் நிலையத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 33 பேர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (பாலியல் வன்கொடுமை), 376 (n) (தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை) 376 (d) (கூட்டு பாலியல் வன்கொடுமை), 376 (3) (16 வயதுக்கு உட்பட்ட சிறுமியின் பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் தற்கொலை செய்துகொண்டாலும் கொரோனா மரணமாக கருதப்படும் – உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம்

”கைது செய்யப்பட்ட 24 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் 22 பேர் செப்டம்பர் 29 தேதிவரை காவல்துறை காவலுக்கும், 2 மைனர்களும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பபட்டுள்ளனர்.” என துணை ஆணையர் (மண்டலம் 3) சச்சின் குஞ்சால் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 29 ஆம் தேதி முதல் செப்டம்     பர் 22 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளதாக காவல்துறை கூடுதல் ஆணையர் (கிழக்கு பகுதி) தத்தாத்ரேய் கராலே தெரிவித்துள்ளார்.

நிலத்தில் இருந்து வெளியேற மறுத்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு

”கடந்த ஜனவரி மாதம் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த அவரது காதலன், அதைக் காணொளியில் பதிவு செய்து சிறுமியை மிரட்டி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உள்டோம்பிவ்லி, பத்லாபூர், முர்பாத் மற்றும் ரபாலே உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காதலின் உறவினர் மற்றும் அவருக்குத் தெரிந்த நபர்கள் பாலியல் வன்கொடுமையில்  ஈடுபட்டனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக துணை ஆணையர் சோனாலி டோலி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக கராலே கூறியுள்ளார்.

குற்றம்சாட்டவர்கள் சில அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்று, கட்சிப் பெயர் குறிப்பிடாமல் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்

நாக்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், இது போன்ற குற்றங்களைத் தடுக்க சிறப்பு முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

”மாநிலத்தில் அச்சத்தின் நிழல் பரவியுள்ளது. அதிகரித்து வரும் இது போன்ற குற்றங்களின் எண்ணிக்கை கவலையளிக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”அமைதியான நகரமாக அறியப்பட்டுள்ள டோம்பிவ்லி பகுதியில் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என அவர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அரசியல்படுத்தக் கூடாது என மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவை துணைத் தலைவரும், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவருமான நீலம் கோர்ஹெ தெரிவித்துள்ளார்.

‘சக்திவாய்ந்த தென்னிந்தியாவை நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ – குடியரசுத் துணைத் தலைவர் அறிவுறுத்தல்

பாதிக்கப்பட்டவர் பாதுகாக்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், மும்பையின் சாகிநாக பகுதியில் ஓடும் வாகனத்தில், 34 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்ததில் சிவசேனா அரசு கண்டனத்திற்கு உள்ளானது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Source : PTI

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்