பொதுமக்கள் 38 பேரை மியான்மர் ராணுவத்தினர் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை எரித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று, சேவ் தி சில்ரன், அதன் ஊழியர்கள் இருவர் மனிதாபிமானப் பணிகளைச் செய்துவிட்டு விடுமுறைக்காக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, கிழக்கு மியான்மரில் உள்ள கயா மாநிலத்தில் அவர்களது வாகனம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதாகக் தெரிகிறது.
மோ சோ கிராம மக்கள் ராணுவத்துக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் இருந்து தப்பிக்க மேற்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமை நோக்கி சென்றனர். அவர்களை ராணுவ வீரர்கள் கைது செய்து கை, கால்களை கட்டி சுட்டுக் கொன்றனர். பின்னர் உடல்ளை தீ வைத்து எரித்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவச் சோதனைச் சாவடியில் சில ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த மறுத்ததாகவும், வாகனங்களுக்குள் இருந்தவர்கள் இராணுவ வீரர்களை நோக்கிச் சுடத் தொடங்கியதாவும் ஆயுதப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மோ சோ கிராமத்துக்கு அருகில் வாகனங்களில் எரிந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் குழந்தைகள், முதியவர்கள் என பலரின் சடலங்கள் கிடைத்துள்ளன.
இவர்கள் அனைவரும் மியான் மர் ராணுவத்தால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டவர்கள் என்று ‘காரென்னி’ எனப்படும் மனித உரிமை அமைப்பைக் குற்றம் சாட்டி இதுதொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு ராணுவம் கண்டித் துள்ளது. அதே நேரத்தில் கொல்லப்பட்ட அனைவரும் தீவிரவாதிகள் என்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் மியான்மர் ராணுவதரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
உள்ளூர் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட இராணுவ அறிக்கைகளில் சேவ் தி சில்ட்ரன் ஊழியர்களைக் குறிப்பிடவில்லை என அவ்வமைப்பு கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.