Aran Sei

பெகசிஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

பெகசிஸ் ஸ்பைவேர் கொண்டு வேவு பார்க்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவில், குஜராத்தில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நவீன் குமார் சவுத்ரி, கேரளாவில் உள்ள அமிர்த் விஸ்வ வித்யாபீடத்தின் பேராசிரியர் பி. பிரபாகரன், மும்பை ஐஐடியைச் சேர்ந்த அஸ்வின் அணில் குமாஸ்தே ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை குழு 8 வார காலத்திற்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் – மீண்டும் பணி வழங்க உத்தரவிட்ட தொழிலாளர் நீதிமன்றம்

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஒ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பெகசிஸ் மென்பொருள் கொண்டு  வேவு பார்க்கப்பட்டவர்கள் என்று கசிந்த பட்டியலை, தி வயர் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டன.

பெகசிஸ் மென்பொருள் கொண்டு இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் பட்டியலில் தி வயர் இணையதளம் வெளியிட்டிருந்தது.

ஒடுக்கப்பட்டவருக்கு முடிவெட்ட மறுத்த ஆதிக்க சாதியினர் – கைது செய்து காவல்துறை நடவடிக்கை

”ஜனநாயகத்தின் முக்கிய தூணான பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான வெளிப்படையான பாதிப்புகளை இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுத்துகிறது” என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்