Aran Sei

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ஐஐடி மாணவர் மீது புகார் – மாநிலத்தின் எதிர்கால சொத்து என்று கூறி குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கிய கவுகாத்தி நீதிமன்றம்

கௌகாத்தி ஐஐடியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவரையும் பாதிக்கப்பட்ட மாணவியையும் மாநிலத்தின் எதிர்கால சொத்துக்கள் என்று கூறி கௌஹாத்தி உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட பி.டெக் மாணவர் உத்சவ் கடமின் பிணை மனுவை விசாரித்த நீதிபதி அஜித் போர்த்தகூர் , மனுதாரருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள்  ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததும், பாதிக்கப்பட்ட பெண், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் ஐஐடி கவுகாத்தியில் தொழில்நுட்ப படிப்புகளைப் படிக்கும் திறமையான மாணவர்கள் இவர்கள் அரசின் எதிர்கால சொத்துக்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைப்பது அவசியமில்லை” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி நீதிமன்றம் அளித்த  உத்தரவில், குற்றஞ்சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் 19 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள். மேலும், அவர்கள் இருவேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். குற்றப்பத்திரிகையில் காட்டப்பட்டுள்ள சாட்சிகளின் பட்டியலை ஆராய்ந்து பார்த்தால், குற்றம் சாட்டப்பட்டவர் தங்கள் ஆதாரங்களைச் சிதைக்கவோ அல்லது பிணையில் வெளிவந்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களை பாதிக்கும் வாய்ப்பு இல்லை” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ரூ. 30,000 மதிப்புமிக்க பத்திரம் மற்றும் இருவரின் உத்தரவாதத்துடன் குற்றஞ்சாட்டபட்டவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

வழக்கறிஞர் கே.என்.சௌதிரி உத்சவ் கடம் ஒரு சிறந்த மாணவர் என்று வாதிட்டார். அவருக்கு எதிராக “நம்பகமான சான்றுகள்” இல்லை என்றாலும், 120 நாட்களுக்கு மேல் காவலில் இருந்தார் என்று கூறியுள்ளார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுமித்ரா சர்மா, பிணை அனுமதிக்கப்படுவதற்கு எதிராக வாதிட்டார்.

கடந்த மார்ச் 28 ஆம் தேதி இரவு, பாதிக்கப்பட்ட இளம் பெண் மயக்கத்தில் இருந்தபோது குற்றஞ்சாட்டபட்டவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மறுநாள் அப்பெண்ணை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர் ஏப்ரல் 3 ம் தேதி கைது செய்யப்பட்டார்.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்