Aran Sei

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசின் நிதி கிடைக்கிறது – மம்தா பானர்ஜி விமர்சனம்

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசின் நிதி கிடைக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சாகர்தீகி நகரில் நடந்த நிர்வாக ரீதியிலான மறு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறும்போது, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மேற்கு வங்காளம், ஒன்றிய அரசின் நிதி உதவி இன்றி மாநில அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே எனது கடைசி போராட்டம் – மம்தா பானர்ஜி

ஏன் இந்த வேற்றுமை? ஒன்றிய அரசின் எந்தவித உதவியும் இன்றி இதனை நாங்கள் செய்து வருகிறோம். ஒன்றிய அரசு எங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும். ஆனால், நிதியை விடுவிக்காமல் உள்ளது. பல முறை இந்த விவகாரம் பற்றி எடுத்து உரைத்தும் அதில் பலனில்லை. இந்த ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது, ஒன்றிய அரசின் தனிப்பட்ட நிதியல்ல. அது மாநிலத்தில் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கான உரிமை.

வங்காள மக்களுக்கான அரிசியை தராமல் ஒன்றிய அரசு இழப்பை ஏற்படுத்த முடியாது. வங்காள மக்கள் அதிகம் சாப்பிட கூடிய உணவு அரிசி. அதிலும், ஏழைகள் அதிகம் உட்கொள்ள கூடியது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி கிடைக்கிறது என ஒன்றிய அரசை மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

Source : India today

Bjp Government gives approval to Tamilnadu Tableau | Republic Day Parade 2023 | Deva’s Update 88

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்