Aran Sei

‘பாஜக ஆட்சியில் அடக்குமுறை சட்டங்கள்’ – கருத்தரங்கு நடத்திய உபா சட்டம் மற்றும் அடக்குமுறைச் சட்டங்கள் எதிர்ப்புக் கூட்டியக்கம்

பா சட்டம் மற்றும் அடக்குமுறைச் சட்டங்கள் எதிர்ப்புக் கூட்டியக்கம் (MURL) சார்பாக “பாஜக ஆட்சியில் அடக்குமுறைச் சட்டங்கள்” என்ற தலைப்பில் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் இன்று தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது

கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் குறைஷி (மும்பை) வரவேற்புரை நிகழ்த்த துணைத்தலைவர் இ எம் அப்துல் ரஹ்மான் (கொச்சி) துவக்க உரையாற்றினார்.

தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (NCHRO) தலைவரும், கூட்டியக்ககத்தின் தமிழகத் தலைவருமான பேரா. அ. மார்க்ஸ், குர்மீத் சிங் ஜஜ் (பஞ்சாப்), என்சிஹெச்ஆர்ஓ-வின் தமிழகத்தலைவர் வழக்கறிஞர் ப. பா மோகன், ஆஷிஸ் குப்தா (டெல்லி), கூட்டியக்ககத்தின் மத்தியக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் கே.பி. முஹம்மது ஷரீஃப் (கேரளா), நிங்தௌகோன்காஜம் ராஜேஷ் (மணிப்பூர்), பல்லவி கோஷ் (அஸ்ஸாம்), சந்தீப் நிமேஷ் (உத்தரப்பிரதேசம்) ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டியக்ககத்தின் மத்தியக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் அ. முஹம்மது யூசுப் (மதுரை) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, தமிழகச் செயலாளர் கஸ்ஸாலி மீரான் நன்றியுரையாற்றினார்

தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB)சமீபத்தில் வெளியிட்ட 2020 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் UAPA வழக்குகள் குறித்தான புள்ளிவிவர அறிக்கை கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்