Aran Sei

பஞ்சாப்: வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

40 விவசாய சங்கங்களின்  கூட்டமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சா  நாடு தழுவிய போராட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பஞ்சாப் முழுவதும் விவசாயிகள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நான்கு மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

அமிர்தசரஸ், பதிண்டாவில் உள்ள வல்லா என்ற இடத்தில் விவசாயிகள் ரயில் பாதையை மறித்துள்ளனர். அம்பாலாவில் உள்ள ஷம்பு டோல் பிளாசா, பஞ்ச்குலாவின் பர்வாலா மற்றும் கைதலின் சீக்கா ஆகிய இடங்களில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

கர்நாடகா: நிவாரணம் வழங்குவதிலும் மதப் பாகுபாடும் காட்டும் பாஜக – காங்கிரஸ் விமர்சனம்

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தினர்.

ஒன்றிய அரசு, விவசாய சங்கங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பரில் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. குறைந்த பட்ச ஆதார விலைக்கு உறுதி செய்ய்யப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இன்னும் அதற்கான  சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

எல்கர் பரிஷத் வழக்கு: பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதை கவனத்தில் கொள்ளாத நீதிமன்றங்கள்

இந்த சூழலில் ஒன்றிய  அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பஞ்சாபில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் மூத்த தலைவர் ஹரிந்தர் சிங் நிருபர்களிடம் கூறும்போது, “ஒன்றிய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை நிறைவேற்றக் கோரி 4 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளோம். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தொடருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source: hindustantimes

Kallakurichi மாணவிக்கு நடந்தது postmortem இல்ல | sakthi international school update | Dr pugalendhi

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்