Aran Sei

தேசிய கொடி அவமதித்ததில் இந்தியா வருத்தமாக இருப்பதாக மோடி பேச்சு – உண்மையில் நடந்தது என்ன?

குடியரசு தின டிராக்டர் பேரணியில், தேசிய கொடி அவமதிக்கப்பட்டதில் இந்தியா வருத்தமாக இருக்கிறது என மன் கி பாத்-யில் (மனதின் குரல்) பிரதமர் மோடி பேசியுள்ளார்.

2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று  (ஜனவரி 31) உரையாற்றிய பிரதமர் மோடி, குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி குறிப்பிட்ட போது, ”குடியரசு தினத்தன்று தேசிய கொடியை அவமதித்ததால், இந்தியா வருத்தமடைந்தது” என கூறியள்ளார்

முன்னதாக, விவசாயிகள் நடத்திய டிராக்டர் தின பேரணியில் போது,  தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக, செங்கோட்டையில்  பறந்தது கொண்டிருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு, காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பாஜகவின் டெல்லி யூனியன் பிரதேச செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குரானா, வருண் காந்தியின் நாடாளுமன்ற செயலாளர் இஷிதா யாதவ், பாஜக ஆதரவாளர்கள் திவ்யா குமார் சோதி, விக்ராந்த் குமார், சுமித் கடெல், சுமித் தக்கார், அனுராக் தீட்சித்யா, ஷெபாலி வைதியா ஆகியோர் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களின் அடங்குவர்.

வலது சாரி பிரச்சார வலைத்தளமான ஒபி இந்தியா(Opindia) ஒரு கட்டுரையில், போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியைப் பறக்க விட்டனர் என்று எழுதியுள்ளது.

Photo Credit : Thewire.in

பாஜக சார்பு பிரச்சார டிவிட்டர் கணக்குகளான @NindaTurtles, @ExSecular and @IamMayank_ made similar போன்றவையும் இதே போல ட்வீட் செய்தன.

இந்நிலையில், நாட்டின் தேசியக் கொடி அகற்றப்படவில்லையென ஜனநாயக சக்திகள் ஆதாரத்தோடு கூறிவந்தன.

உண்மை சரிபார்த்தல்

இந்த உண்மை சரிபார்த்தல் இரண்டு பிரிவுகளாகச் செய்யப்படுகிறது. அவை இரண்டு பிரச்சாரத்தையும் தனித்தனியாக விளக்குகின்றன.

இந்தியக் கொடி மாற்றப்படவில்லை அல்லது நீக்கப்படவில்லை 

போராட்டக்காரர்கள் வெற்று கொடிக் கம்பத்தில் ஒரு கொடியை ஏற்றினர். அவர்கள் இந்தியக் கொடியைக் கழற்றவோ அல்லது அதற்கு பதிலாகக் காலிஸ்தான் கொடியை ஏற்றவோ செய்யவில்லை. இதை உறுதிப்படுத்தும் பல காணொளிகள் உள்ளன. கீழேயுள்ள ஏஎன்ஐ வெளியிட்டுள்ள காணொளியில், போராட்டக்காரர் வெற்றுக் கம்பத்தில் ஏறும்போது செங்கோட்டையின் நுழைவாயிலான லாகூர் வாயிலின் மேல் நாட்டின்கொடி பறப்பதைக் காணலாம்.

டெல்லியில் உள்ள செங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து ஒரு போராட்டக்காரர் ஒரு கொடியை ஏற்றியுள்ளார் –

இந்தியக் கொடியை பல படங்களில் காணலாம்.

செங்கோட்டை இப்போது போராட்டக்காரர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களால் ஏற்றப்பட்ட கொடியை அகற்ற காவல்துறை இப்போது மேலே ஏறிக்கொண்டிருக்கிறது. – இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

கோட்டையின் மாடங்கள்மீதும் கொடிகள் ஏற்றப்பட்டன.

போராட்டக்காரர்கள் ஏற்றியது காலிஸ்தான் கொடி அல்ல

போராடும் விவசாயிகளால் ஏற்றப்பட்ட கொடிகள் நிஷன் சாஹிப் அல்லது சீக்கிய மதக் கொடிகள். “மஞ்சள் அல்லது காவி நிறத்தில், காந்தாவுடன் (இரண்டு வாள்கள்) கூடிய முக்கோணக் கொடிகள் சீக்கிய கொடிகள். அவை காலிஸ்தான் கொடிகள் அல்ல ”என்று பஞ்சாப் : ஜர்னிஸ் த்ரூ ஃபால்ட் லைன்ஸ் நூலின் ஆசிரியர் அமன்தீப் சந்தூ கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக ஒரு கொடி ஏற்றப்படும் போது, ​​முந்தைய கொடி வீழ்த்தப்பட்டு புதிய கொடி பறக்க விடப்படுகிறது. இந்த நிகழ்வில், மூவர்ணக் கொடி தொடர்ந்து பறந்து கொண்டிருக்கிறது. அதைத் தொடவில்லை. சீக்கியக் கொடியை ஏற்றுவது என்பது தேச மக்களும் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள் என்பதாகும். அவர்களும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தேசத்தின் ஆட்சியாளர்கள் அவர்களைக் குறைவாக மதிப்பிடக் கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள். ”

பத்திரிகையாளர் ஹர்த்தோஷ் சிங் பால் ஏற்றப்பட்ட கொடிகள் சீக்கிய மதக் கொடிகள், காலிஸ்தான் கொடி அல்ல என்று ட்வீட் செய்தார்.

குடியரசு தின அணிவகுப்புகளின்போது பஞ்சாப் மாநில வண்டிகளில் சீக்கிய கொடிகள் இடம்பெறுகின்றன. இது இந்த ஆண்டும் சீக்கிய கொடி ஏற்றப்பட்டிருந்தது.

Photo Credit: Thewire.in

கீழே உள்ள ஸ்கிரீன் ஷாட் கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

Photo Credit : Thewire.in

டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின்போது போராட்டக்காரர்களால் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது என்ற பரவலான கூற்று தவறானது. கொடி ஏற்றப்பட்ட கம்பம் காலியாக இருந்தது, ஆனால், பலர், இந்திய தேசியக் கொடியை நீக்கி விட்டு இந்தக் கொடியை ஏற்றினர் என்று கூறியது தவறானது என்று இதன் வழியே தெரியவந்துள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்