Aran Sei

தடைகளை வென்ற சமீஹா பர்வீன் – சர்வதேச தடகளப் போட்டிக்கு அனுப்ப உயர்நீதி மன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளி வீராங்கனை சமீஹா பர்வீனை போலந்து நாட்டில் நடைபெறும் போட்டிக்கு அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலாந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச நான்காவது தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு, அனைத்து திறமைகள் இருந்தும் இந்திய ஒன்றிய அரசின் விளையாட்டுத் துறை அதிகாரிகளால் தான் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, வீராங்கனை சமீஹா பர்வீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 11, இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் 12 அன்று , நடந்த இந்த மனு மீதான விசாரணையின் போது , தகுதிப் போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் அனுமதி மறுப்பதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேரடியாக பதில் அளிக்க வேண்டுமெனவும் நீதிமன்ற அமர்வு எச்சரித்திருந்தது.

இந்நிலையில், போலாந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச நான்காவது தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு வீராங்கனை சமீஹா பர்வீன் அனுப்ப விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்