“இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான பேச்சைத் தடுப்பதில் ட்விட்டர் தன்னை அறியாமலே உடந்தையாக இருப்பதாக நான் நினைப்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்” என்று ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பரக் அகர்வாலுக்கு டிசம்பர் 27 அன்று எழுதிய கடித்ததில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
2021 ஜனவரி முதல் ஜூலை வரை ராகுல் காந்தியை மாதத்திற்குச் சராசரியாக சுமார் 4 லட்சம் பேர் புதிதாகப் பின்தொடர்ந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை 2021 ஆகஸ்ட் முதல் அவரின் ட்விட்டர் கணக்கு 8 நாட்களுக்கு நிறுத்தப்பட்டதிலிருந்து பல மாதங்களாகக் கடுமையாகக் குறைந்துள்ளது. 2021 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மாதத்திற்கு 2,500 க்கும் குறைவான புதிய நபர்களே ராகுல்காந்தியைப் பின்தொடர்ந்துள்ளனர் என்று சமூக ஊடகங்களைப் பகுப்பாய்வு செய்யும் நிறுவனங்களான எம்ப்லிஃபி மற்றும் சோஷியல் பிளேட் ஆகியவற்றின் தரவுகளை ட்விட்டருக்கு ராகுல் காந்தி அனுப்பியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
“ட்விட்டர் இந்தியாவில் உள்ளவர்கள், அரசாங்கத்தின் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகி அமைதியாக இருக்கிறோம். இந்தியாவில் சர்வாதிகாரத்தின் வளர்ச்சிக்கு ட்விட்டர் உதவாது என்பதை உறுதிப்படுத்தும் மகத்தான பொறுப்பு உங்களுக்கு உள்ளது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.