Aran Sei

டெல்லியில் நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்கு தடை – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்.

டெல்லியில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்கு ஒன்றிய அரசு தடை விதித்ததற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜூலைம் 30 ஆம் தேதி, தலைநகர் டெல்லியில் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு இந்திய அரசு தடை விதித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பாரம்பரியத்தை கைவிடாத மடாதிபதிகளுக்கு ஏ/சி அறை எதற்கு? – பழ. நெடுமாறன் கேள்வி

”மாநாடு நடைபெறவிருந்த மண்டபத்தை காவல்துறையினர் பூட்டியதையும், தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொள்ள சென்ற மாணவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி வளைத்து மத்திய காவல்படை நிறுத்தப்பட்டு அவர்கள் சிறை வைக்கப்பட்டது போன்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது அப்பட்டமான மனித உரிமை மற்றும் கருத்துரிமை மீறலாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பல்வேறு நாடுகளில் நடைபெறும் இனப்படுகொலைகளைக் கண்டித்துப் பல மாநிலங்களில் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள் நடத்துகின்றன. ஆனால், ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பிரச்சனைக் குறித்து நடத்தப்பெறும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தடைவிதிக்கப்படுவது தமிழின எதிர்ப்போக்காகும். இதற்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும், கட்சிகளும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்