Aran Sei

வாரணாசி ஞானாபி மசூதியை அகற்றக் கோரி மனு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

வாரணாசி நகரில் உள்ள ஞானாபி மசூதியின் இடத்தில் இருக்கும் கோவிலைச் சீரமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உரியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புள்ளதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடவுள்கள் சிவன், மா சிரிங்கர் கவுரி, கணேஷ் சார்பாக 10 தனிநபர்கள் தொடரப்பட்டுள்ள வழக்கில், ”1699 ஆண்டில் அவுரங்கசீப் உத்தரவின் பெயரில் அங்கிருந்த கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அம்பானி, அதானியின் நெருக்குதலின் கீழ் பிரதமர் மோடி – விவசாய சங்கத் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹன்

இது தொடர்பாக பதிலளிக்க, மத்திய அரசு, உத்திரபிரதேசம் அரசு, வாரணாசி மாவட்ட நீதிபதி, வாரணாசி மூத்த காவல்துறை கண்காணிப்பாளர், மசூதியின் மேலாளர்கள், காசி விஸ்வநாதன் கோயில் அறங்காவலர் குழு, உத்திரபிரதேச இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானாபி மசூதி பகுதியில் உள்ள பழமையான கோவிலின் முதன்மை இடங்களில் பூஜை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளதாக தி வயர் தெரிவித்துள்ளது.

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25ன்படி மதப்பிரச்சாரம், வழிபாடு, நடைமுறைகளை மேற்கொள்ளச் சுதந்திரம் வழங்குகிறது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

‘ஆர்எஸ்எஸ்-ன் சர்வாதிகாரத்தை எதிர்த்து சுதந்திரத்துக்கான அணிவகுப்பை தொடருவோம்’ – ராகுல் காந்தி

இதற்குத் தடையாக இருக்கும் மசூதியை, இந்திய அரசியலைமைப்பு பிரிவு 13 (1) யின் – படி, சிலை வழிபாட்டாளர் பூஜை மேற்கொள்ளவதை உறுதி செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

மசூதியை அகற்ற கோரி வலது சாரி அமைப்புகள், “அயோத்தி-பாபர்-பாபர் சர்ப் ஜாங்கி ஹை, காசி-மதுரா அப் பாகி ஹை (அயோத்தியும் பாப்ரியும் வெறும் முன்னோட்டங்கள். காசியும், மதுராவும் மிச்சமிருக்கிறது)” என முழங்ககளை முன்வைத்தன.

கதை திருட்டு விவகாரம் – கங்கனா ரணாவத் மீது வழக்குப் பதிவு

1992 ஆம் ஆண்டு  அயோத்தியில் இருந்த மசூதி, கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரித்த வழக்கில், 2019 ஆண்டில் நிலத்தைக் கோவில் அறக்கட்டளைக்கு வழங்கியும், 2020 ஆம் வழங்கப்பட்ட தீர்ப்பில், மசூதி இடிப்பிற்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் 32 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஞானாபி முசூதியை அகற்றக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை போல, மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்தில், ஒரு மசூதி சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது, அதை அகற்ற வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டில் மதுரா நீதிமன்றத்தில் மனுவளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்