Aran Sei

சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி திட்ட அலுவலர் மரணம் – சிறப்பு விசாரணைக் குழு விசாரணை அமைக்க பேரா.ஜவாஹிருல்லா வேண்டுகோள்

சென்னை ஐ ஐ டியில் மீண்டும் ஒரு சந்தேக மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார். .

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை ஐஐடி உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

”சென்னை ஐஐடி கல்வி வளாகத்தில் உன்னிகிருஷ்ணன் எனும் ஆராய்ச்சி திட்ட அலுவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் கொள்ளச் செய்திருக்கிறது. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் சாதிய பாகுபாடு தொடர்ந்து தலைவிரித்தாடுகிறது. எனவே தான் பணியிலிருந்து வெளியேறுவதாக அங்குப் பணிபுரிந்த உதவி பேராசிரியர் விபின் கடிதம் கொடுத்து இருக்கிறார் என்பதனையும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அதன் தொடர்ச்சியாக ஆராய்ச்சி திட்ட அலுவலரின் மரணம் நிகழ்ந்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2019ல் பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐஐடியில் நிலவும் பாரபட்சப்போக்கை சுட்டி காட்டிய நிலையில் மர்மமாக மரணித்தார் என்பதை நினைவு படுத்திய அவர், இது குறித்த சிபிஐ விசாரணையும் மர்மமாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்..

நீதிக்கான நீண்ட பயணம் – நிரபராதி என்று நிரூபிக்க 12 ஆண்டுகளை சிறையில் கழித்த காஷ்மீரி

நல்ல கல்வி என்பது மனிதர்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கலைந்து சம உரிமைகுறித்த புரிதலை உருவாக்குவது ஆகும். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனத்தில் இது போன்ற சமூகக் கேடுகளை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. சமூக ரீதியான பாகுபாடுகளுக்குக் காரணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்க அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உடனடியாக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்