இந்தியா முழுவதும் சிறையில் உள்ளவர்களில் சுமார் 66 சதவீதம் பேர், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சையத் நாசிர் உசேன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ள, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையில் பதில் அளித்துள்ளார்.
திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கம் – விதிகளை மீறியதாக டிவிட்டர் நிறுவனம் தகவல்
அதில், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான கணக்கெடுப்பின் படி, சிறையில் உள்ள 4,78,600 பேரில், 3,15,409 பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுததப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 1,62,800 பேர், அதாவது 34% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 99,273 பேர், அதாவது 20.74% தாழ்த்தப்பட்டவர்கள் என்றும், 53,336 பேர் அதாவது 11.14% பழங்குடியினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,26,393 இதர வகுப்பினர் என்றும் அந்த அமைச்சர் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் 1,01,297 பேர் சிறையில் இருப்பதாகவும், அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் 44,603 பேரும், பீகாரில் 39,814 பேரும் சிறையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ளவர்களின் மறு வாழ்விற்கும் அவர்களுடைய கல்விக்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, அது மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்று தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர், இருந்தபோதும், சிறை கைதிகளின் மறுவாழ்வு தொடர்பாக, சிறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்குறித்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.