Aran Sei

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான விதிகள் – அமெரிக்க அரசியல் கட்சி முதன்முறையாக சேர்ப்பு

லிபோர்னியாவின் ஜனநாயக கட்சி (சிடிபி), அதன் நடத்தை விதிகளில் சாதி ரீதியான பாகுபாட்டைச் சேர்த்ததன் மூலம், அமெரிக்காவில் சாதிய பாகுபாட்டை எதிர்கொள்ள பாதுகாப்பு அளித்த நாட்டின் மிகப்பெரிய மாநில அரசியல் கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

சாதியைப் பாகுப்பாட்டை நடத்தை விதிகளில் சேர்த்திருப்பதன் மூலம், சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் சிடிபி தொடர்புடைய அனைவருக்கும் குடிமை உரிமைகள் பாதுக்காப்பதை உறுதி செய்வது மட்டுமில்லாமல், அமெரிக்காவில் சாதிய பாகுபாட்டிற்கு இடமில்லை என்பதற்கான சமிக்ஞையைப் பரந்த அளவில் பொது மக்களுக்கு அனுப்பும்.

இந்த முக்கிய நடவடிக்கை கலிபோர்னியா மற்றும் நாடு முழுவதும், சாதிய பாகுபாட்டிற்கு உரிய தீவிர கவனத்தை கொடுக்கும் உரையாடலை மேலும் அதிகரிக்கும். அமெரிக்கா முழுவதும் சாதி சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்காகன பாதுகாப்புகள், திறன்கள் மற்றும் முதலீடுகளை கட்டமைப்பதை அரசாங்கங்களும் நிறுவனங்களும் முன்னுரிமையாக ஆக்க வேண்டும்.

சாதி சமத்துவத்திற்கான போராட்டத்தில் உள்ள தலைவர்கள் சாதியைப் பாதுகாக்கப்பட்ட வகையாக அங்கீகரிப்பதில் இந்த மகத்தான நடவடிக்கையைப் பாராட்டுகிறார்கள்.

கலிபோர்னியா ஜனநாயக கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் அமர் சிங் ஷெர்கில், “எங்கள் கட்சி நடத்தை விதிகளில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான பாதுகாப்புகள் சேர்க்கப்பட்டவுடன், கலிபோர்னியா ஜனநாயக கட்சி சாதி சமத்துவத்திற்கான வரலாற்று போரில் தலைமை தாங்க வேண்டும் என்பதை அங்கீகரித்து, சாதி – ஒடுக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு வெளிப்படையான சட்ட பாதுகாப்புகளின் தேவையை நாங்கள் ஒப்புக் கொள்வதை உறுதி செய்கிறது” என தெரிவித்துள்ளார்.

”சாதி பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பு, ஏற்கனவே இருக்கும் மதம், இனம் ஆகிய பிரிவுகளின் கீழ் அணுகப்படலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும் பல சாதிய பாகுபாடு சம்பவங்கள்குறித்து மக்கள் புகார் அளிக்கவில்லை. ஏனெனில் வெளிப்படையான சட்ட பாதுகாப்பு இன்னும் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”பாலின அடையாளம் மற்றும் பாலின நோக்குநிலைகளுக்கான பாதுகாப்புகளை சேர்ப்பதற்கான முந்தைய போராட்டங்களைப் போலவே, சாதியைச் சேர்ப்பது அனைத்து அமெரிக்கர்களையும் பாதுக்காக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களின் உரிமைகளை நாங்கள் மதிக்கிறோம் என்பதை மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் அறிந்து இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அமெரிக்காவில் சாதி பாகுபாடு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கும், மற்ற அனைத்து மாநில கட்சிகளையும் பின்பற்ற வலியுறுத்துவதற்கும் எங்கள் சேர்க்கை மற்ற நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என அவர் கூறியுள்ளார்.

ஈக்குவாலிட்டி லேப்ஸ் செயல் தலைவர் தேன்மொழி சௌந்தரராஜன், “சாதி சமத்துவம் என்பது குடிமை உரிமைகள் இயக்கத்தின் சக்திவாய்ந்த அங்கீகாரம் ஆகும். புலம்பெயர்ந்த நாடுகளில் சாதி மிகவும் ஆழமாக உயிர்ப்புடன் உள்ளது, அது தெற்காசிய அமெரிக்க அனுபவங்களின் பல பகுதிகளை பாதிக்கிறது. எங்கள் அறிக்கை 4 தலித்துகளில் ஒருவர் உடல் ரீதியான தாக்குதலையும், 3 பேரில் 2 பேர் பணியிட பாகுபாட்டையும், 3 பேரில் ஒருவர் கல்வியில் பாரபட்சத்தையும் அனுபவிக்கிறார்கள். சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் தரவுகளும் தனிக்கதைகளும், சாதி சமத்துவத்தின் அவசரத்தையும் தேவையையும் சுட்டிக்காட்டுகின்றன.” என தெரிவித்துள்ளார்.

”காலிபோர்னியா மாநில பல்கலைக்கழக அமைப்பில் இருக்கும் 22 வளாகங்கள் சாதியைப் பாதுகாக்கப்பட்ட வர்கமாக சேர்க்க கோரின. சாதியால் ஒடுக்கப்பட்ட அமெரிக்கர்களின் நீதிக்காக இனியும் காத்திருக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”சாதியால் ஒடுக்கப்பட்ட அமெரிக்கர்கள் பாதுகாப்பிற்கு தகுதியானவர்கள் என்பதையும், அனைத்து அமெரிக்க நிறுவனங்களிலும் அது சேர்க்கப்படுவதற்கான நேரம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்பதையும், அதனை அங்கீகரிப்பதன் மூலம் ஜனநாயக கட்சி இந்த உரையாடலுக்கு தலைமை வகிக்கிறது. மாநிலம் மற்றும் நாடு முழுவதும் இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்” கூறியுள்ளார்.

கலிபோர்னியா வர்த்தக நீதிக் கூட்டணியைச் சேர்ந்த வில் ஜமீல் வில்ட்ஸ்கோ, “சாதி பாகுபாட்டி சுதந்திரம் என்பது ஒரு தொழிலாளர் உரிமைகள் சார்ந்த பிரச்னையாகும். நடத்தை விதிகளில் சாதி அடிப்படையிலான பாதுகாப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். சாதியால் ஒடுக்கப்பட்ட அமெரிக்கர்கள் பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகங்களில் தொடர்ந்து சுரண்டப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. சாதியின் அடிப்படையில் பாகுபாட்டை எதிர்கொள்ளும் கலிபோர்னியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இது ஒரு குறிப்பிடத் தக்க முன்னேற்றமாகும். சாதி ஒடுக்குமுறை என்பது தொழிலாளர் ஒடுக்குமுறை என தெளிவாகிறது. உழைக்கும் மக்களுக்காக நாம் எழுந்து நின்று சாதிய ஒடுக்குமுறைக்குயில் இருந்து சட்ட பாதுகாப்பு வழங்க  வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலின் கோவிந்த் ஆச்சார்யா, ”அனைத்து விளிம்புநிலை மக்களின் பாதுகாப்புகளுக்கும் நாம் உறுதி பூண்டிருக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்களை அமெரிக்கா அங்கீகரித்திருப்பதால், சாதி அடிப்படையிலான பாதுகாப்புகளை சேர்ப்பது முக்கியமானதாகிறது. சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குத் தற்போதுள்ள பாதுகாப்புகளை விரிவுபடுத்தி அவற்றை வெளிப்படையாகக் கூறவேண்டியது முக்கியம். சாதி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான பாதுகாப்புகள் ஒரு முக்கியமான உலகளாவிய மனித உரிமைகள் பிரச்சினையாகும், மேலும் கலிபோர்னியா மீண்டும் மனித உரிமைகள் வரலாற்றை உருவாக்குவதில் நாட்டை வழிநடத்த வேண்டிய நேரம் இது.”என தெரிவித்துள்ளார்.

Source : Equalitylabs.org

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்