Aran Sei

‘சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகள்’: இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு சித்த மருத்துவர் ஷர்மிகா ஆஜர்

தவறான மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு சித்த மருத்துவர் ஷர்மிகா நேரில் ஆஜராகியுள்ளார்

சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைத்தளங்களில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, ஒரு ‘குளோப் ஜாமூன்’ சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும். குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும். தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும்’ போன்ற மருத்துவ கருத்துகளை தெரிவித்தார். இவை சர்ச்சையை ஏற்படுத்தியது.

அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்: விவாதத்திற்கு வருமாறு சவால்விடுத்த இந்திய மருத்துவ சங்கம்

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகா வெளியிட்ட கருத்துக்கள் குறித்து விளக்கமளிக்க இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பை இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழ்நாடு பிரிவு துணை இயக்குநர் பார்த்திபன், கடந்த 9-ந்தேதி வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார். ஷர்மிகா வழங்கிய மருத்துவ குறிப்புகள் சித்த மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா, மருத்துவ குறிப்புகள் வழங்குவதற்கு முறைப்படி பதிவு செய்துள்ளாரா, அறிவியல் ஆதாரங்களோடு ஆலோசனைகள் வழங்கப்பட்டதா என்பன உள்ளிட்ட விசாரணைகள் நடந்து வருகிறது.

முன்னதாக, “ஷர்மிகா பதிவுபெற்ற மருத்துவர் என்பதால், அவரது விளக்கத்தின் அடிப்படையில், அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது முடிவு செய்யப்படும்” என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஏற்கெனவே கூறியிருந்தது.

Bjp new social media rule to empower PIB to remove the news | Maridas | Rangaraj Pandey

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்