Aran Sei

கோழி, ஆடு மற்றும் மீனை விட மாட்டிறைச்சியை அதிகமாக சாப்பிடுங்கள் – மேகாலயா பாஜக அமைச்சர் பேச்சு

மேகாலயா மக்கள் கோழி, ஆட்டிறைச்சி மற்றும் மீனை விட அதிகமாக மாட்டிறைச்சியை சாப்பிடுங்கள் என மாநில பாஜக அமைச்சர் சான்போர் ஷுல்லாய் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமைச்சராக பதவியேற்ற அவர், ஒரு ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அவர்கள் விரும்பியதை சாப்பிட உரிமை உள்ளது என கூறியுள்ளார்.

பொது காப்பீடு நிறுவன பங்குகளை விற்பனை செய்ய அனுமதிக்கும் சட்ட திருத்தம் – தனியார்மயமாக்கும் ஏற்பாடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு.

நேற்று (31.07.2021) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மேகாலயா மக்கள் கோழி, ஆடு மற்றும் மீனை விட அதிகமாக மாட்டிறைச்சியை சாப்பிடுவதை நான் ஊக்குவிக்கிறேன். இதன் மூலம் பாஜக பசுவதைக்கு எதிரான கட்சி என்ற கருத்து மாற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சான்பார் ஷுல்லா, “அசாம் மாநிலத்தில் இயற்றப்பட்டிருக்கும் புதிய பசு சட்டத்தால், மேகாலயாவிற்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பேசப்படும்” என கூறியுள்ளார்.

அழுகுரலின் நெடுங்கதை – கொரோனா காலமும் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்களும்

அசாம் அரசின் கால்நடை சட்டத்தால், மேகாலயா மாநிலத்திற்கு வரும் கால்நடை போக்குவரத்து தடைபட்டுள்ளது. எனவே, மேகாலயா மாநிலத்திற்கு என தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என மேகாலயா காங்கிரஸ் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்