Aran Sei

கோயிலுக்கு சென்ற சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் – சரியான பதிலடி என கோவிலின் தலைவர் கருத்து

த்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள தாஸ்னா தேவி கோவிலுக்குச் சென்ற இஸ்லாமிய சிறுவன் தாக்கப்பட்டது சரியான பதிலடி என கோவிலின் தலைவர் ’யதி நர்சிங்கானந்த் சரஸ்வதி’ தெரிவித்துள்ளதாக தி வயர் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் கோவிலுக்கு அத்துமீறி உள்நுழைந்த சம்பவங்கள் இதே போன்று கையாளப்பட்டிருப்பதாக சரஸ்வதி தெரிவித்துள்ளாரென டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுபான்மையினர் கோவிலுக்கு நிழைய கூடாது என கோவில் நிர்வாகத்தால் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பைப் படிக்காத  14 வயது சிறுவன் நுழைந்ததை அடுத்து, சரஸ்வதியின் ஆதரவாளரால் தாக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது.

ஹெலிகாப்டர் தரையிறங்க இடம் மறுத்த மாவட்ட நிர்வாகம் : பிரச்சாரத்தை ரத்து செய்த கமலஹாசன்

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய சரஸ்வதி, “கோவிலுக்குள் அத்துமீறும் சிறுபான்மையினருக்கு தக்க பதிலடி வழங்குமாறு எனது ஆதரவாளர்களுக்குப் பயிற்சி அளித்திருந்தேன். அவர்கள் இதைப் போன்றே அவர்கள் மார்ச் 12 ஆம் தேதி  செயல்பட்டிருக்கின்றனர்” என தெரிவித்தார்.

”கோவிலுக்குள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கோவில் வாசலுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரியும், ஆனால் இந்தப் பையன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற சாக்குப்போக்குடன் உள்ளே நுழைந்தான்.” என அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவன் “குடிநீர் என்ற சாக்குப்போக்கு  சொல்லி  உள்நோக்கத்துடன் வந்துள்ளான்” ஆனால் இந்த நோக்கம் என்னவென்று விளக்க முடியவில்லை என கூறிய சரஸ்வதி. “கோயிலுக்கு வெளியே கைப்பம்பு இருக்கும்போது தண்ணீர் குடிக்க அவர் உள்ளே நுழைவதை எப்படி விளக்குகிறீர்கள்?” என அவர் பத்திரிக்கையாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு – போராட களமிறங்கும் ஆம்ஆத்மி கட்சி

இந்தக் கொடூரத் தாக்குதலைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்த சரஸ்வதி,  “யேஹி தோக்காட்பாத் ஹோ கயீ, உன்ஹே ரெக்கார்ட் நஹீன் கர்னா சையே தா (இது ஒரு தவறு, அவர்கள் வீடியோ எடுத்திருக்கக் கூடாது)” என அவர் கூறியதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்