Aran Sei

கிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது

கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளது பாலஸ்தீனர்கள் இடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது மற்றும் இஸ்ரேலிக்கும் காசா போராளிகளுக்கும் இடையிலான வன்முறையை மீண்டும் தூண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு ஜெருசலேமின் கிழக்கு பகுதியைக் கொண்டாடும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அணிவகுப்பினர் நகரினுள் நுழையும் டமாஸ்கஸ் வாயிலுக்கு செல்லும் சாலைகளில் உலோக தடுப்புகளை அமைத்துள்ள இஸ்ரேலிய காவல்துறையினர், அந்தப் பகுதிகளுக்குள் பாலஸ்தீனர் நுழைய முடியாமல் தடுத்துள்ளனர்.

கைகளில் கொடிகளுடன் அணிவகுத்து வரும், இஸ்ரேலிய வலது சாரி குழுக்களை சேர்ந்தவர்கள் ஹீப்ரு மொழியில், ‘அரேபியர்களுக்கும் மரணம்’ மற்றும் ’உங்கள் கிராமம் எரியட்டும்’ உள்ளிட்ட அரேபிய எதிர்ப்பு கோஷங்களை முழக்கமிட்டனர். அதில் ஒரு இஸ்ரேலியர் அரபு மொழியில், “இரண்டாவது நக்பா வருகிறது (1948 ஆம் ஆண்டு சியோனிச துணைப்படைகளால் 7 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு)” கூச்சலிட்டார்.

இத்தகைய கோஷங்கள் ஒவ்வொரு ஆண்டு அணிவகுப்பின் போதும் கேட்கின்றனர் என பாலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலியர்களின் இந்த அணிவகுப்பிற்கு எதிராக பழைய நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆர்பாட்டம் நடத்திய பாலஸ்தீனர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 33 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய படைகள் பயன்படுத்திய ரப்பர் குண்டுகள், கையெறி குண்டுகள் மற்றும் உடல் ரீதியான தாக்குதலால் இவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்பாட்டத்தில் பங்கேற்ற பாலஸ்தீனர்களில் சிலர், முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தியாகு மற்றும் தற்போதைய பிரதமர் நாஃப்தாலி பென்னெட் ஆகியோர் படங்களை எரித்தனர்.

Source : Aljazeera

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்