Aran Sei

காவிரி டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியை தடுத்திட வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

காவிரி டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், எண்ணெய்/எரிவாயு வள சிறு வயல்கள்(DSF) மூன்றாம் கட்ட ஏல அறிவிப்பில் புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு பகுதியும் இடம் பெற்றிருப்பதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியீட்டுவுள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்கான டாடா நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

இந்த அறிக்கையில், “இந்திய அரசின் நிறுவனங்களான ஓ.என்.என்.சி, ஆயில் இந்தியா லிமிடெட் போன்றவற்றால் ஏற்கெனவே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயும் இருக்கும் இடங்களாக அறியப்பட்ட வயல்களிலிருந்து ஹைட்ரோகார்பன் வளங்களை எடுத்து வருவாய் மேற்கொள்ள முடியாமல் இருந்த பகுதிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விட்டு வருவாய் பங்கீடு ஒப்பந்தம் மூலம் வருவாய் ஈட்டுவதற்காக 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் கண்டறியப்பட்ட சிறுவயல்ககள் கொள்கை (DSF). இந்த கொள்கை மூலம் 2016ஆம் ஆண்டில் ஒரு ஏலமும் 2018ஆம் ஆண்டில் ஒரு ஏலமும் நடைபெற்றது.” என்று தெரிவித்துள்ளது.

அளவிற்கதிகமான ஆண்டிபயாடிக் மருந்து பயன்பாட்டால் நோய் எதிர்ப்புத் திறன் வலுவிழக்கும் அபாயம் – அரசு நெறிமுறைபடுத்த பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

ஆனால், தற்போது மூன்றாம் கட்டமாக 75 எண்ணெய் வயல்கள் 32 ஒப்பந்த பகுதிகள் மூலமாக ஏலம் விடப்படவுள்ளதாகவும், இந்தியா முழுவதுமுள்ள 13 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 230MMT ஹைட்ரோகார்பன் இதில் கிடைக்கும் என பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், “கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட ஏல அறிவிப்பில் காவேரி படுகையின் புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு பகுதியில் உள்ள 463.2 சதுர கிலோமீட்டர் பகுதியும் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது

‘சட்டவிதிகளை மீறி கட்டிடம் கட்டிய ஈஷா மையம்’ – விதிமீறல் ஆவணங்களை வெளியிட்ட பூவுலகின் நண்பர்கள்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதைத் தெரிந்தும் கூட தொடர்ச்சியாக ஹைட்ரோகார்பன் ஏலங்களில் காவேரி டெல்டா பகுதிகளை மத்திய அரசு இடம்பெறச் செய்வது எதேச்சதிகாரமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட வடதெரு பகுதிக்கு ஏற்கெனவே ONGC நிறுவனம் 2027ஆம் ஆண்டுவரை பெட்ரோலியம் எடுப்பதற்கான ஏலத்தை பெற்றுள்ளதாக ஏல அறிவிப்பு ஆவணத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது- பூவுலகின் நண்பர்கள்

எனவே, இதனைக் காட்டி காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணியை ஏலத்தில் எடுக்கும் நிறுவனம் மேற்கொள்ள முயன்றால் அதை தடுக்க தமிழ்நாடு அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பெட்ரோலியத்துறை அமைச்சகம் காவிரி படுகையை இந்த ஏல அறிவிப்பிலிருந்து நீக்கவும் மேற்கொண்டு எந்த ஏல அறிவிப்பிலும் காவேரி டெல்டா பகுதியைச் சேர்க்கக் கூடாது என்பதையும் அழுத்தமாக ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்