Aran Sei

கண்ணகி-முருகேசன் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டால் வழக்கறிஞர் பொ.ரத்தினத்தை அரசு நியமிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் கோரிக்கை

18 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள நீதியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு, இவ்வழக்கு மேல்முறையீடு நடைபெற்றால், உயர்நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் பொ.ரத்தினம் மற்றும் ப.பா.மோகன் ஆகியோர் சிறப்பு வழக்கறிஞர்களாக் நியமிக்கப்பட வேண்டும் என்று இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், சாதிய கவுரவத்துக்காக மனித சமூகத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் இக்கொலை நிகழ்த்தப்பட்டு உள்ளது. இனியாவது தமிழ் மண்ணின் வரலாறு எப்போதும் கண்ணகி எரித்ததாகவே இருக்கட்டும்” என நேற்றைய தீர்ப்பில் நீதிபதி உத்தமராசா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

நின்று கிடைத்த நீதி – கண்ணகி – முருகேசன் வழக்கின் வரலாறும் தீர்ப்பும்

2003-ம் ஆண்டு விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில், காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் முருகேசன் – மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேந்த கண்ணகி இருவரையும், சாதியக் கொடூரத்தின் உச்சகட்டமாக. காதில் விஷம் ஊற்றி, இருவரையும் உயிரோடு எரித்து கொலை செய்தனர் பெண்ணின் தந்தை, அண்ணன் உள்ளிடோர். தகவலறிந்த காவல் துறையும் கொலையை மூடி மறைத்து, கொலையாளிகளைக் காப்பாற்ற முயற்சித்துள்ளது.

நெருக்கடிகளுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்படுகின்றது. அந்த வழக்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்கவேண்டும் என்பதற்காகவே முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மற்றும் உறவினர் குணசேகரன் இருவரையும் குற்றவாளியாகச் காவல்துறையினர் சேர்த்துள்ளனர். இவர்களை இருவருக்கும். இக்கொலைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதையறிந்து இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது தீர்ப்பின் இன்னொரு முக்கிய அம்சமாகும்.

அநீதியை எதிர்ப்பதுதான் அறம் – (கண்ணகி – முருகேசன்) வழக்கறிஞர் ரத்தினத்தோடு ஓர் உரையாடல்

வழக்கினை 18 ஆண்டுகளாக விடாமல், தொடர்ந்து கண்காணித்து விருத்தாசலம், கடலூர், செங்கல்பட்டு நீதிமன்றங்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இடைவிடாமல், தேவையான நேரத்தில் உரிய தலையீடுகளைச் செய்து, இந்தத் தீர்ப்பு வருவதற்கு காரணமாக அமைந்த இவ்வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பொ. ரத்தினம் அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், ஒரு வழக்கின் உண்மையான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கவும், தொடர்பில்லாமல் பொய்யாக குற்றம்சாட்டப்படுவோர் விடுதலையாகவும் உதவியாக இருப்பது விசாரணை அறிக்கையான குற்றப்பத்திரிகையாகும். உரிய விசாரணை மேற்கொண்டு சரியான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.பி.ஐ ஆய்வாளர் நந்தகுமார் அவர்களுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் மனித சமூகத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் கொலை இது என இந்த ஆணவக்கொலையை தீர்ப்பில் குறிப்பிட்டு நீதி வழங்கியுள்ள  வன்கொடுமை வழக்குகள் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி திரு உத்தமராசா அவர்களையும் பாராட்டுகின்றோம்.

நினைவை வதைக்கும் வாதை – கண்ணகி முருகேசன் நினைவு நாள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த இந்த நீதியினைக் காப்பாற்றி தக்கவைத்துக்கொள்வது முக்கியமாகும். குறிப்பாக மாவட்ட நீதி மன்றங்களில் தண்டனையாகும் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளின் மேல்முறையீட்டில், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் போதிய வகையில் உரிய கவனம் செலுத்தி, குற்றத்தரப்பை நிரூபிக்க தவறுதை சாதகமாகக்கொண்டு உயர்நீதி மன்றத்தால் குற்றவாளிகள் ஓரிரூ மாதங்களில் விடுவிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிகள் ‘மேல்முறையீடு சென்றால், தமிக அரச தீவிர அக்கறை/கவனம் செலுத்தவேண்டும். மிகவும் தாமதமாக கிடைத்துள்ள இந்நீதியை தக்கவைத்துக்கொள்ளவும், பாதிக்கப்பட்டோருக்கு கிடைத்த நீதியை காப்பாற்றவும் மேல்முறையீட்டில் வழக்கறிஞர் பொ.ரத்தினம் மற்றும் வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோரை சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம். அதே நேரத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் contegecy திட்டத்தின் கீழ் முருகேசன் குடும்பத்திற்கு மாதாந்திர ஓய்வூதியம், நிரந்தரக் குடியிருப்பு. நிலம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்ற மறுவாழ்வு உதவிகளையும் வழங்கிட வேண்டும். மேலும், தீருதவி தொகையும் வழங்கப்பட வேண்டும்.

ஆணவப்படுகொலையை ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு சீமான் வேண்டுகோள்

பொய்யான ஆவணங்கள் உருவாக்கி, குற்றவாளிகளுக்கு உதவிய விருத்தாசலம் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இவர்கள் இருவர் மீதும் இந்தக் கொலை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இதே காலத்தில் இவர்கள் பணியில் தொடர்ந்ததுடன், பதவி உயர்வும் பெற்றுள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இருவருக்கும் வழங்கப்பட்டுள்ள பணப்பலன்கள் உள்ளிட்ட அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும், வழக்கு நடத்துவதிலும் உரிய அனுபவம் உள்ளோர்களை உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழு அமைத்து, தமிழகத்தில் நடந்துள்ள அனைத்து ஆணவக் கொலை வழக்குகளையும் கண்காணிக்க வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்கவும், சாதி மீறிய திருமண இணையரை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன?

தனது தங்கை என்றும் பாராமல் அவரையும், அவரது காதல் கணவரையும் சாதி ஆதிக்கத்தில் உயிரோடு எரித்துப் படுகொலை செய்த குற்றவாளி மருதுபாண்டியனை ‘விவசாயிக்குத் தூக்கு” என்று இன்றைய தினத்தந்தி நாளிதழ் குறிப்பிட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும். இது போன்ற செய்திகள் குற்றவாளிக்கு ஆதரவாக அனுதாபம் உருவாக்கும் செயல் என்பதுடன், சாதி ஆதிக்கம் மற்றும் வன்கொடுமைகளை ஊக்குவிபதாகவே அமையும். எனவே, வரும் காலங்களில் அச்சு, காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்துவகை ஊடகங்களும் இது போன்ற கேட்டுக்கொள்கிறோம்.

கொடூர கொலை மற்றும் வன்கொடுமைக நிகழ்வுகளைப் பாதிக்கப்பட்டோர் கண்ணோட்டத்திலிருந்து அணுகும் போக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்