Aran Sei

ஊடகங்களின் டிஆர்பி வெறியால் குற்றவாளியாக்கப்பட்டேன் – சூழலியல் ஆர்வலர் தீஷா ரவி குற்றச்சாட்டு

Image Credit : scroll.in

டகங்களின் டி.ஆர்.பி வெறியால், டூல்கிட் வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டேன் எனச் சூழலியல் ஆர்வலர் தீஷா ரவி தெரிவித்துள்ளார்.

தீஷா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

”நான் அந்த நீதிமன்ற அறையில் நின்று, என் வழக்கறிஞர்களைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கும்போது, நான் என்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை நான் புரிந்துகொண்டேன். சட்ட உதவி கிடைக்குமா என்பது எனக்குத் தெரியாது. அது எனக்குத் தெரிவதற்கு முன்பே, ஐந்து நாட்களில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டேன்” என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவிலும் தொடரும் சாதிவெறி – ஆட்டுடை தரித்த ஓநாய்கள்

”அடுத்தடுத்த நாட்களில் எனது தனியுரிமை மீறப்பட்டதில், ஆச்சரியமில்லை; அனைத்து செய்திகளிலும் எனது புகைப்படங்கள் வெளியானது; எனது நடவடிக்கைகள் குற்றங்களாக அறிவிக்கப்பட்டன, நீதிமன்றத்தால் அல்ல. டி.ஆர்.பி பசியில் இருக்கும் தட்டையான ஊடக நிறுவனங்களால். என்னைக் குறித்த அவர்களின் எண்ணைத்தை திருப்திபடுத்துவதற்காக நான் செய்த பல செயல்பாடுகளை அறியாமல் அங்கேயே அமர்ந்திருந்தேன்” எனத் தீஷா ரவி தெரிவித்துள்ளார்.

கொரோன காலத்தில் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி? – ராகுல் காந்தி கேள்வி

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க பகிர்ந்த டூல்கிட் –ஐ உருவாக்கியதில் தீஷா ரவி மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 13 ஆம் தேதி டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தீஷா ரவிக்கு பிப்ரவரி 23 ஆம் தேதி பிணை வழங்கப்பட்டது.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்