Aran Sei

உல்ஃபாவின் முக்கிய தளபதி சரண் – வங்க தேசத்திற்கு தப்பிச் சென்றவர் சரணடைவதாக அறிவிப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த உல்ஃபா இண்டிபெண்டண்ட் அமைப்பின் துணை ராணுவ தளபதி திருஷ்டி ராஜ்கோவா என்ற மனோஜ் ராபா, மேகாலாயாவில் உள்ள தில்செங்கரே கிராமத்தில் இந்திய ராணுவத்திடம் சரணடைந்துள்ளார்.

அசாமில் தடை செய்யப்பட்ட இயக்கமான அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி இண்டிபெண்டண்ட் (யுஎல்எஃப்ஏ) அல்லது உல்ஃபா இண்டிபெண்டண்ட்டின் தளபதி பரேஷ் பருவா ஏற்கனவே சரணடைந்ததை அடுத்து தற்போது ராஜ்கோவா சரணடைந்துள்ளார்.

அசாம் காவல் துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரியான ஹிரன் நாத், ராஜ்கோவா சரணடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். ராஜ்கோவா ”நாளை (13/11/20) ராங்கியாவின் (மேற்கு அசாம்) 21 வது மலைப் பிரிவில் முறையாக சரணடைவார்” என தெரிவித்துள்ளார்.

மேகாலாயாவில் உள்ள கிழக்கு காரோ மாவட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்குரிய 5 நபர்களை  இரண்டு வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து பிடித்துள்ளனர்.

விசாரணையில் தன்னை ராஜ்கோவா என்று அடையாளப்படுத்திக் கொண்ட அவர், மார்ச் மாதம் மேகாலாயாவில் நடந்த ஒரு என்கவுண்டரில் இருந்து தப்பித்து வங்காள தேசம் சென்றதாகவும், அங்கு கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடியால் தற்போது இந்திய ராணுவத்தை தொடர்புக்கொண்டு சரண்டைவதாக அறிவித்து, இந்தியா திரும்பியுள்ளதாக கூறியுள்ளார் என்று காவல்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களிடமிருந்து ஏகே 81 ரக துப்பாக்கிகள், 9 எம் எம் துப்பாக்கிகள் வெடிமருந்துகள் போன்றன கைபற்றப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு சீனா மியான்மர் எல்லையில் பரேஷ் பருவா, ராஜ்கோவை துணை ராணுவ தளபதியாக்கினார். இதற்கு முன்பு இவர் மற்றொரு தீவிரவாத குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார்.

வெளிநாட்டினருக்கு எதிராக அசாமில் ஏற்பட்ட கிளர்ச்சியில் உருவானது தான் உல்ஃபா அமைப்பாகும். அசாமை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களது முக்கியமான கோரிக்கையாகும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்