Aran Sei

உத்தரபிரதேசம்: காதலர் தினத்தை பசு காதல் தினமாக கொண்டாடிய பாஜக அமைச்சர்

லக அளவில் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ந் தேதியை பசு அணைப்பு தினமாக கொண்டாட வேண்டுமென இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்தது. எனினும் இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியதை தொடர்ந்து, இந்திய விலங்குகள் நல வாரியம் தனது அறிவிப்பை திரும்பப்பெற்றது.

இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் உத்தரபிரதேசத்தின் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தர்மபால் சிங் நேற்றைய தினத்தை பசு காதல் தினமாக கொண்டாடினார். பசுக்களுக்கு வெல்லம், ரொட்டி போன்றவற்றை வழங்கி பசு காதல் தினத்தை கொண்டாடிய அவர், பசுக்களை நமது தாயாக கருத வேண்டும் என வலியுறுத்தினார்.

சென்னை: காதலர் தினத்தை எதிர்த்து எத்திராஜ் கல்லூரி முன்பு பாரத் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்

இதுகுறித்து பேசிய அவர், “நமக்கு 3 தாய்கள் உள்ளனர். முதலில் நம்மைப் பெற்றெடுக்கும் நமது தாய், 2-வது பசு தாய், 3-வது பாரத தாய். முதல் அன்பு நம் தாய் மீது இருக்க வேண்டும். பிறகு பசு தாய் மற்றும் பாரத தாய்க்கு நமது மரியாதையை செலுத்த வேண்டும். பசுவின் சாணம் மற்றும் சிறுநீரை விட உலகில் சிறந்தது எதுவும் இல்லை. என்னை போலவே அனைத்து மக்களும் காதலர் தினத்தை பசு காதல் தினமாக கொண்டாட வேண்டும்” என அமைச்சர் தர்மபால் சிங் கூறியுள்ளார்.

Source : hindustan times

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்