உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது சில தினங்களுக்கு முன்பு போர் தொடுப்பதாக ரஷ்யா அறிவித்திருந்தது. அதன் படி சில தினங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்யா தாக்குதல் தொடுத்து வந்துள்ளது. அப்போது கார்கிவ் நகரிலிருந்து வெளியேறுவதற்காக ரயில்நிலையம் செல்லும்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்ததாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா எல்லையில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள்: பிஸ்கட் மட்டுமே உண்டு உயிர் வாழும் அவலம்
மரணமடைந்த மாணவனின் பெற்றோருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருக்கின்ற இந்தியர்களின் பாதுகாப்பை அந்தந்த நாட்டு அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதர்களை அழைத்து வலியுறுத்தி இருப்பதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.