Aran Sei

ஆஸ்திரேலிய கடற்கரையில் சிக்கியுள்ள திமிங்கிலங்கள் – உதவத் துடிக்கும் மக்கள்

Image Credits: CNN

ஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரை தீவான டாஸ்மேனியாவில் உள்ள மணல் குவியலில் நூற்றுக்கணக்கான பைலட் திமிங்கலங்கள் சிக்கித் தவிக்கின்றன.

“மீட்புப் பணி நடந்து வருகிறது, இருப்பினும் ஏற்கனவே எத்தனை திமிங்கலங்கள் இறந்திருக்கக்கூடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்று உள்ளூர் வனவிலங்கு அதிகாரிகள் திங்களன்று தெரிவித்துள்ளதாக சி.என்.எனில் செய்தி வெளியாகியுள்ளது.

டாஸ்மேனியாவின் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவையின், வடமேற்கு பிராந்திய மேலாளர், நிக் தேகா, “270 பைலட் திமிங்கலங்கள், மூன்று வெவ்வேறு தளங்களில் சிக்கித் தவிப்பதாக, ஆஸ்திரேலிய பொது ஒளிபரப்பாளரான ஏ.பி.சியிடம் கூறியுள்ளார்.

“சிக்கித் தவிக்கும் முக்கிய திமிங்கல குழு, மேக்வாரி ஹெட்ஸ் படகு வளைவிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மணல் குவியலில் உள்ளது” என்றும், “அங்கிருந்து பல நூறு மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு மணல் குவியலில் வேறொரு திமிங்கல குழு உள்ளது” என்றும் நிக் தேகா கூறியுள்ளார்.

2019-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், அமெரிக்க மாநிலமான ஜார்ஜியாவின் கடற்கரையில் சுமார் 26 திமிங்கலங்கள் சிக்கிக் கொணடன, அவற்றில் 16 இறந்தன.

மேலும், 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம், எளிதில் அணுகமுடியாத நியூசிலாந்தின் கடற்கரையில் சிக்கித் தவித்த 145 திமிங்கலங்கள் உயிரிழந்தன. அந்நாட்டின் தெற்கில், மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட தீவான, ஸ்டூவர்ட் தீவின் மேசன் விரிகுடாவிலிருந்து ஒரு மைல் தொலைவில் இரண்டு பைலட் திமிங்கலங்கள் குழு கண்டுபிடிக்கப்பட்டன.

இப்போது ஆஸ்திரேலிய கடற்கரைசில் சிக்கியுள்ள திமிங்களின் மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக டாஸ்மேனிய கடல் பாதுகாப்பு திட்ட நிறுவனத்தின் பணியாளர்களும் இருப்பார்கள் என்று அந்நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் பதியப்பட்டுள்ளது.

“பொது மக்கள் உதவ ஆர்வமாக உள்ளனர் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம், ஆனால் கலந்துகொள்ளக் கேட்காவிட்டால் மக்களை அப்பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“உள்ளூர் காவல்துறையினர் நீரின் தளவாடங்கள், மீன் பண்ணைகள் மற்றும் உள்ளூர் தொழில்துறையுடனான இனைந்து இப்பணிக்கு உதவுகிறோம்” என்று பதிவிட்ட காவல் துறை, படகுகளில் கடற்கரையை அணுக வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்