Aran Sei

யானை வழித்தடம் : “காட்டுக்குள் ரிசார்ட்டுகளுக்கு என்ன வேலை?” – உச்சநீதி மன்றம்

Credit : thehindu.com

மிழகத்தில் உள்ள 16 யானைகள் நடைபாதைகளை (இதில் 5 மாநிலங்களுக்கு இடையில் உள்ளன) பாதுகாக்க ஒரு திடமான அரசியல் நிலைப்பாடு தேவைப்படுகிறது. யானைகள் தங்களது வெவ்வேறு காட்டு இருப்பிடங்களுக்கு இடையே சென்று வர யானை வழித்தடங்களை பயன்படுத்துகின்றன.

2011-ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் , நீலகிரி மாவட்டத்திலுள்ள சீகூர் பள்ளத்தாக்கை யானைகள் வழித்தடம் என அறிவித்த மாநில அரசின் உத்தரவை உறுதி செய்திருந்தது. இதற்கு எதிராக, பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட ரிசார்ட் உரிமையாளர்களும் தனியார் நிலவுடைமையாளர்களும் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது, என்று தி ஹிந்து நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

ஒரு பகுதியை யானை வழித்தடமாக அறிவிக்க மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சுற்றுலா விடுதி (resort) முதலாளிகள் தொடுத்த வழக்கை முற்றிலுமாக நிராகரித்து இருக்கிறது உச்சநீதி மன்றம். அவர்களுடைய தரப்பில் எந்த நியாயமும் இல்லை எனவும் கூறியிருக்கிறது.

இந்த விவகாரத்தை முழுவதாக ஆய்வு செய்ய சென்னை உயர்நீதி மன்றத்தால் அனுப்பப்பட்ட நிபுணர்கள் குழுவின் முடிவுகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது உச்சநீதி மன்றம். இந்த முடிவுகள் அறிவியல்பூர்வமாக இல்லை என தொடரப்பட்ட மனுவை நிராகரித்து உள்ளது.

சில ரிசார்ட் உரிமையாளர்கள் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழ முடியும் என்று வாதிட்ட போது, “காட்டுக்குள் உங்களுக்கு என்ன வேலை?” என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி போப்டே கிண்டலாக கேட்டதால தி ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

சீகூர் பள்ளத்தாக்கில் பெருமளவிலான கட்டுமான தொழில்கள் நடக்கவிருப்பதாக இந்த வழக்கின் மூலம் தெரிய வந்தது. இதை பற்றிய முழு விவரத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டது உச்சநீதி மன்றம்.

மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா கொடுத்த அறிக்கையில் அங்கு செயல்பட்டு வரும் அனைத்து (39) உல்லாச போக்கிடங்களும் அரசின் அனுமதியின்றி செயல்படுகின்றன எனவும் 27 உல்லாச போக்கிடங்கள் குடியிருப்பு எனும் பெயரில் அனுமதி வாங்கி உல்லாச போக்கிடமாக செயல்படுவதாகவும் மீதமுள்ள 12 உல்லாச போக்கிடங்களும் எந்த அனுமதியும் இன்றி செயல்படுகின்றன எனவும் கூறியிருக்கின்றார். நீதிமன்றத்தின் அறிவுரைப்படி 39 உல்லாச போக்கிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

யானை வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ள, 22 கிமி நீளமும் 1.5 கிமி அகலமும் கொண்ட, அந்தப் பகுதியில் 309 கட்டிடங்களும் 39 உல்லாச போக்கிடங்களும் அமைந்துள்ளன.

உச்சநீதி மன்றத்தின் ஆணைக்கிணங்க சீகூர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் உல்லாச போக்கிடங்களையும் இடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் முன்னால் முதல்வர் ஏ.ஜே.டி. ஜான்சிங். மேலும் அந்த கட்டிடங்கள் அழிக்கப்படாவிட்டால் சமூக விரோதிகளும் வனவிலங்கு கடத்தல்காரர்களும் அந்த கட்டிடங்களை ஆக்கிரமித்து கொள்வர் என்றும் மின்சார வேலிகள் மற்றும் வனவிலங்குகள் வராமல் இருப்பதற்காக செய்யப்பட்ட தடுப்புகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு யானைகள் வழித்தடத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. அந்தத் தீர்ப்பில் யானைகளின் நாடோடித்தன்மை சுற்றுசூழலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று எனவும் மந்தைகளாக திரியும் யானைகள் காட்டின் நில அமைப்பை தீர்மானம் செய்கின்றன எனவும் விதைகளை காடு முழுவதற்கும் பரப்புவதற்கும் செடிகள் மரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஊட்டம் அளிப்பதாகவும் வனத்தின் உணவுச் சங்கிலியின் முக்கியமான அங்கம் எனவும் கூறியுள்ளனர்

இந்த யானை வழித்தடம் யானைகளின் நாடோடித்தன்மைக்க்கு ஏதுவாகவும் மிகவும் குறுகலான மற்றும் நேரான பாதை யானைகளின் வாழ்விடங்களுக்கு சென்று ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டுக்கு செல்லவும் உதவியாக இருக்கும். மேலும் இயற்கையாகவே யானைகள் ஒரே குழுக்களுக்குள் இனபெருக்கம் செய்து கொள்ளாது மற்ற இடங்களுக்கு சென்று வேறு மந்தைகளுடனே இனப்பெருக்கம் செய்து கொள்ளும். அதற்கு உதவி செய்யும் வகையிலும் இந்த வழித்தடங்கள் அமையும்.

இன்றைய உலகில் வாழ்விடங்கள் துண்டாடப்படுவது ஒரு முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது யானைகள் நடைபாதை இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும்.. வாழ்விடங்கள் தனிமைப்படுத்தப்படுவது குறைக்கப்பட்டு வனவிலங்குகளை தக்க வைக்க உதவும்.. மற்ற வனவிலங்குகள் இல்லாமல் யானைகளால் சுதந்திரமாக உலவ முடியாது இது அங்குள்ள அந்த இடம் சார்ந்த யானைகளின் இட்டுச் செல்லும் காட்டு யானைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இங்கு யானை நடைபாதை அமைக்க வேண்டும் என கூறியுள்ளனர்

இந்தியாவின் வனவிலங்கு காப்பகத்தின் படி பிரம்மகிரி நீலகிரி மற்றும் கிழக்கு குன்றுகளில் மட்டும் ஏறக்குறைய 6300 – 6500 யானைகள் 12000 சதுர கிமீ பரப்பளவை வசிப்பிடமாக கொண்டுள்ளன பந்திப்பூர் , நகரஹோல், முதுமலை, வயநாடு காவேரி சுவாமி மலை, பிரம்மகிரி போன்ற பல பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இங்குதான் அமைந்துள்ளன. உலர் முள் காடுகள், புல்வெளிகள் என இங்குள்ள தாவரங்களில் உள்ள பன்முகத்தன்மை இந்தியாவிலே யானைகள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. ஆசியாவிலே யானைகள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று

யானை வழித்தடமாக அறிவிக்க வேண்டிய சட்டப்போராட்டம் கடந்த 12 ஆண்டுகளாக நடந்த கொண்டிருந்த வேளையில் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கறது உச்சநீதி மன்றம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்