Aran Sei

கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் – உயர் நீதிமன்றம்

ந்துசமய அறநிலையத்துறை, கோவில்களின் நிலங்களை, கோவில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக் கூடாது எனத் தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, சின்ன நீலாங்கரையில் உள்ள, சக்தி முத்தம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலம் இந்துசமய அறநிலையத்துறை அனுமதி இல்லாமல், 70 ஆண்டுகளுக்கு முன் (1965-ம் ஆண்டு) மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, மீன்வளத்துறை மூலம் மீன் அங்காடி அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது.

அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடம், 70 ஆண்டுகளுக்கு முன், அறநிலையத்துறை அனுமதி இல்லாமல், ஆர்டிஓ அலுவலகம் அமைக்கக் கொடுக்கப்பட்டது.

அறநிலையத்துறை இடங்களை கோவில் பயன்பாட்டைத் தவிர மற்றவற்றிற்கு பயன்படுத்துவதை தடுக்க கோரி வி.பி.ஆர்.மேனன், ஏ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வழ்க்குகளை தொடர்ந்திருந்தனர்.

இந்த இரு கோவில்கள் உள்ளிட்ட பல கோவில் நில வழக்குகளில் நீதிபதி ஆர்.மகாதேவன் தீர்ப்பளித்துள்ளார்.

“வழக்கு தொடர்புடைய அறநிலையத்துறை, கோவில்களின் நிலங்களை, கோவில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக் கூடாது. கோவில் நிலங்களில் குத்தகைக்கு இருப்பவர்கள், அறநிலையத்துறையால் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை செலுத்த வேண்டும்,” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

“கோவில்களின் நிலங்களை கோவில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்,” என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும்,” என்றும் “அது குறித்த அறிக்கையை ஆணையரிடம் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்,” என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக, வழக்குகளை 6 மாதத்திற்கு ஒத்திவைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்