Aran Sei

சோனாகச்சி பாலியல் தொழிலாளர்களின் அவல நிலை: கொரோனாவால் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி

Credits BBC

கொரோனா பொதுமுடக்கம் மற்றும் நோய்த் தொற்றினால் பாலியல் தொழிலாளர்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய சிகப்பு விளக்கு பகுதியான மேற்கு வங்காள மாநிலத்தின் சோனாகச்சி, ஏறத்தாழ 7000 பாலியல் தொழிலாளர்களின் வசிப்பிடமாக இருந்து வருகிறது.

கொரோனா காரணமாக பெரியளவில் தொழில் நலிவடைந்துள்ள நிலையில், இந்தப் பொது முடக்கம் காலத்தில் அங்குள்ள பாலியல் தொழிலாளர்களில் பலரும் கடன் வாங்கியிருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

”73% பாலியல் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு மாற விரும்புகிறார்கள். பொதுமுடக்கத்தின்போது செலவுகளுக்காக பெற்றுள்ள கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அவர்களால் பாலியல் தொழிலிருந்து வெளியேற முடியவில்லை.” என்று கடத்தலுக்கு எதிரான அமைப்பு  நடத்தியுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”கொரோனா நோய்த் தொற்று காலத்தில் 89% பாலியல் தொழிலாளர்கள் கடன் சுமைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதில் 81% பேர் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கடன் வாங்கியுள்ளார்கள். இது அவர்களை இன்னும் அதிகமான பாதிப்புச் சூழலுக்கு தள்ளுகிறது.” என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் தலைவர் தப்பன் சாஹா, ”பெருகிக்கொண்டே வரும் கடன் தொல்லையால் பாலியல் தொழிலாளர்கள் இந்தத் தொழிலை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். நோய்த்தொற்று குறித்த அச்சத்தால் பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவித்திருந்தாலும் அவர்களால் தொழிலை தொடங்க முடியவில்லை.” என்று கூறியதாக தி வீக் தெரிவித்துள்ளது.

”அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு பாலியல் தொழிலார்களுக்கு ஒரு நல்ல மாற்று ஏற்பாடு செய்துத்தர வேண்டும்.” எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

பாலியல் தொழிலாளர்கள் நலனுக்காக செயல்படும் தர்பார் என்ற அமைப்பின் அதிகாரி, பொது முடக்கத்தின் தொடக்கத்தில் இருந்தே பாலியல் தொழிலாளர்கள் பெரும் கடன் நெருக்கடியில் இருந்து வருவாதகக் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்