Aran Sei

பெண்கள் பதிலடி கொடுக்காதது தான் துன்புறுத்தலுக்கு காரணம் – உச்சநீதிமன்ற அமர்வு

credit : theweek.in

“இந்தியாவில் பெண்கள் மீதான குற்றங்கள் “முடிவில்லா சுற்றாக” தொடர்ந்து கொண்டே இருக்கின்றன” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்தியாவில் பெண்கள் மகள், சகோதரி, மனைவி, தாய், தோழி அல்லது தனி நபர் போன்ற ஏதேனும் ஒரு உறவில் வன்முறையை அல்லது பாலின பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள்” என்று உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு 151 பக்க தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டிருந்தது.

“2005-ல் குடும்ப துன்புறுத்தலுக்கு எதிராக வந்த சட்டம் ஒரு “மைல்கல்” என்றாலும், குடும்ப துன்புறுத்தல் தான் குறைந்தபட்ச வன்முறையாக தொடர்கிறது” என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

“பதிலடி கொடுக்காததும், அவர்களின் உரிமையை அங்கீகரிக்கும் சட்டம் இல்லாததும் மற்றும் நடப்பில் இருக்கும் சட்டங்களின் அறியாமையும் தான் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதற்கான காரணம்” என்று கூறியுள்ளது.

“பொதுச்சமூகத்தின் அணுகுமுறை, களங்கப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் போன்ற காரணங்களும் குடும்ப வன்முறை நடக்கக் காரணம்” என்றும் “திருமணத்திற்கு வெளியே கொண்டுள்ள உறவுகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்த மாதிரியான சூழ்நிலைகள் பெரும்பாலான பெண்கள் குரல் எழுப்பாதது அவர்கள் பாதிப்புக்குள்ளாவதை உறுதிப்படுத்துகிறது” என்றும் “குரல் எழுப்பாமல் இருப்பது அவர்கள் விருப்பத்தினால் அல்ல, மாறாக அப்படியிருக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்” என்றும் நீதிபதிகள் சுபாஷ், ஷா மற்றும் அசோக் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும் “எந்த சமூகத்தின் முன்னேற்றமும் பெண்களது உரிமையை பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும் தான் அடங்கியுள்ளது” “குடும்ப துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின் மூலம் குடும்ப உறவில் இருந்து பிரிந்து வாழ பெண்களுக்கு உரிமையுள்ளது” என்றும்  “திருமணம் செய்து கொண்ட வீட்டில் வாழ்வதற்கு அந்தப் பெண் கோரும் சட்ட நடவடிக்கைகளுக்கும் இவற்றை கருத்தில் எடுத்துக் கொள்ளலாம் ”என்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வெளியான 151 பக்க தீர்ப்பில் நீதிபதிகள் இந்த கருத்துகளைக் கூறியுள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்