Aran Sei

உலகம் அடுத்த தொற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும் : உலக சுகாதார நிறுவனம்

உலகம் இன்னொரு தொற்று நோயை எதிர்க்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் க்ரேப்ரேயேசிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், நம் அனைவருக்கும் கோவிட்-19 பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதில் முக்கியமானது மருத்துவம், வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஆடம்பரம் கிடையாது. மாறாக, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் “மருத்துவம் அடிப்படையான மனித உரிமையும் ஆகும். சமூக, அரசியல், பொருளாதார நிலைத்தன்மைக்கு அடித்தளமாக பொது மருத்துவம் இருக்கிறது. இதற்கு தோற்று நோய்களை கண்டறிவதற்கும் பரவுவதை தடுப்பதற்குமான மக்கள் நலத்திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று அர்த்தமாகும். இந்த தொற்று (கொரோனா) இறுதியானது அல்ல. தொற்று பரவல் என்பது மனித வாழ்க்கையின் பகுதியாக இருப்பதை வரலாறு நமக்கு கற்பிக்கிறது. ஆனால், அடுத்த தொற்று வருவதற்குள் உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று டெட்ரோஸ் கூறியுள்ளார்.

அண்மைக் காலங்களில் மருத்துவ துறையில் பல நாடுகள் மிகப்பெரிய முன்னேற்றங்களை சாதித்துள்ள போதிலும் அந்நாடுகள் தனது அடிப்படையான பொது மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த தவிறவிட்டன எனக் கூறும் டெட்ரோஸ், பெரும் நோய் தொற்றுக்களை சமாளிப்பதற்கு பொது மருத்துவ கட்டமைப்பு அத்தியவசியம் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கொரோனா தொற்றில் முதலிடம் வகிக்கிறது. ஆனால், இலத்தின் அமெரிக்க நாடான உருகுவே கடைசி இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் தனிநபர் வருமானத்துடன் ஒப்பிடும்போது உருகுவே அருகில் கூட நிற்க முடியாது. உருகுவே தொற்றை கட்டுப்படுத்துவதில் முதல் இடத்தில் உள்ளது தற்செயலானது அல்ல. உருகுவே பரந்த பொது மருத்துவக் கட்டமைப்பு கொண்டுள்ளதினால்தான் இது சாத்தியம் ஆனது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்