Aran Sei

காயத்ரி மந்திரம் ஓதினால் கொரோனா குறையுமா? – மத்திய அரசின் நிதியுதவியோடு ஆய்வு மேற்கொள்ளும் எய்ம்ஸ்

கொரோனா சிகிச்சையில் காயத்ரி மந்திரம் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்தால் பலனளிக்குமா என்பது குறித்து ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்து வருகிறது.

இந்த ஆய்வுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நிதியுதவி வழங்கியிருக்கிறது. மேலும், இந்த ஆய்வை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலில் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் ஆடை குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்ட பாஜக முதலமைச்சர்: ‘கிழந்த ஜீன்ஸ் அணிவது தவறுதான்’ கருத்தில் உறுதி

இந்த ஆய்வு தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்படாது. மிதமான பாதிப்புக் கொண்டவர்கள் மத்தியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்று எய்ம்ஸ் தெரிவீத்துள்ளது.

ஆய்வுக்காக குறைந்த அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட 20 பேர், இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவினருக்கு வழக்கமான சிகிச்சையும், மற்றொரு குழுவினருக்கு வழக்கமான சிகிச்சையுடன் 14 நாட்களுக்கு காயத்ரி மந்திரத்தை ஓதுவதும், மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதும் கற்றுத்தரப்படும். நோயாளிகளுக்கு இந்தப் பயிற்சியை அங்கீகரிக்கப்பட்ட யோகா பயிற்றுநர் கற்றுக்கொடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தை விட நீதிக்குழு பாதுகாப்பானது – ரஜினியை பகடி செய்த ஸ்டெர்லைட் விசாரணை குழு ஆலோசகர்

இந்த இரு குழுக்களையும் ஒப்பிட்டுச் சாதாரண சிகிச்சை மேற்கொண்டோரைவிட காயத்ரி மந்திரம், யோகா பயிற்சி செய்தோரின் உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அறிவியல் ரீதியாக அறிக்கை மேற்கொள்ளப்படும்

இது குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவத் துறை பேராசிரியர் மருத்துவர் ருச்சி துவா “காயத்ரி மந்திரம், பிராணயாமம் பயிற்சிகள் மேற்கொண்டோருக்கு உடல் சோர்வு குறைந்திருக்கிறதா? மனப்பதற்றம் நீங்கியிருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த முயற்சியில் யோகா குறித்து ஆராய்ச்சி செய்வோரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சி ரியாக்டிவ் புரதம் மூலம் நுரையீரலில் உள்ள அழற்சி எவ்வாறு குறைகிறது என்பதை ஆய்வு செய்வோம். அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பெண்கள் மீதான குற்றத்திற்கு ஆன்லைன் வகுப்புகளும் காரணம் – ராஜஸ்தான் காவல் கண்காணிப்பாளர்

மேலும், இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ரூ.3 லட்சம் உதவி கிடைத்துள்ளதாகவும் மருத்துவர் ருச்சி கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாகவும், நோய் எதிர்ப்பில் ஆயுர்வேதம், யோகா உள்ளிட்டவை மேற்கொள்வதால் நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாவென்று பரிசொதிக்கப்பட்டது. பதஞ்சலி நிறுவனம் கொரொனில் எனும் பெயரில் ஆயுர்வேத மருந்தைக் கொரோனா நோய்த்தொற்றுக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

source: the hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்