தன்னுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்குக் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“என்னுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் நன்றாக இருக்கிறேன். ஆனால், வரும் நாட்களில் உலகச் சுகாதார அமைப்பின் நெறிமுறைகளுக்கு ஏற்ப என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலிருந்து வேலை செய்வேன்,” என்று டெட்ரோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
I have been identified as a contact of someone who has tested positive for #COVID19. I am well and without symptoms but will self-quarantine over the coming days, in line with @WHO protocols, and work from home.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) November 1, 2020
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
It is critically important that we all comply with health guidance. This is how we will break chains of #COVID19 transmission, suppress the virus, and protect health systems.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) November 1, 2020
“நாம் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல் விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. இவ்வாறு செய்தல்தான், நாம் கொரோனா பரவலின் சங்கிலியை உடைத்து வைரஸை அடக்கி சுகாதார அமைப்புகளைப் பாதுகாக்க முடியும். நானும், என்னுடன் உலகச் சுகாதார அமைப்பில் பணியாற்றும் சக ஊழியர்களும், உயிர்களைக் காப்பாற்றிப் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து போராடுவோம். கொரோனாவை ஒருங்கிணைந்து எதிர்ப்போம்!” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
My @WHO colleagues and I will continue to engage with partners in solidarity to save lives and protect the vulnerable. Together!
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) November 1, 2020
முன்னதாக, கொரோனாவைக் கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய டெட்ரோஸ் அதானெம், அடுத்து வரவிருக்கும் சிலமாதங்கள் கடினமானவையாக இருக்கப்போகிறது என எச்சரிக்கை விடுத்தார்.
பிரபலங்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படுவதோ, அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதோ புதிதல்ல. சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
செப்டம்பர் 21-ம் தேதி (தொற்று ஏற்படுவதற்கு முன்), அமெரிக்கர்கள் மத்தியில் பேசிய அதிபர் ட்ரம்ப், ”கொரோனா யாரையுமே பாதிக்காது. வயதானவர்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் மட்டுமே நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள்.” எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.