Aran Sei

கண் தான இணையதளத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர்

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தமிழகத்தில் நடைபெறும் தேசிய கண்தானத்துக்கான கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கண்களை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

கண் தானம் செய்ய உறுதியளித்த 2 நாட்களுக்குப் பின் (திங்கட்கிழமை) தேசிய சுகாதார அமைப்பால் ஊருவாக்கபட்ட கண் தானம் செய்வோருக்கான  இணையதளத்தை முதலமைச்சர்  துவக்கிவைத்தார். தமிழ்நாட்டில் கண் தானம் செய்வதற்கான பதிவேட்டை உருவாக்க இந்த வலைத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

கண் தானம் செய்வதற்கான சான்றிதழை சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை முதல்வரிடம் வழங்கினார்.

”எண் .174, ஜே -3, ராஜபுரம் முதல் தெரு, நேதுஞ்சலை நகர், சேலம் – 636 005 ல் வசிக்கும் வி.கருப்பா கவுண்டரின் மகன் திரு எடப்பாடி கே பழனிசாமி, கண் தானம் செய்யும் பெருமைமிக்கவர் என்றும் நாட்டை பார்வை குறைபாட்டிலிருந்து விடுவிக்க உறுதி எடுத்திருப்பவர்” என்றும் அச்சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செய்தி குறிப்பில் “நாட்டில் சுமார் 68 லட்சம் பேர் கருவிழியில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகக் கண்பார்வை இழந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நபரிடம் இருந்து கிடைக்கும் 2 கண்களின் மூலம் கார்னியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து இருவருக்குப் பார்வையளிக்க முடியும் என்றும் கண்களின் மற்ற பகுதிகளையும் பாதிக்கப்பட்டோரின் கண்களைத் திருத்தப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில், கண்களை தானம் செய்ய விரும்புவோர் தங்கள் பெயர், குடியிருப்பு முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை பதிவு செய்யலாம். கண்களை தானம் செய்ய உறுதியளித்த பின் மின்னஞ்சலின் மூலம் வரும் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனைப் பதிவு செய்வது கண் தான வங்கிக்குக் கண்களைக் கொண்டு சேர்க்க உதவும்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்