Aran Sei

`ஆயுஷ் திட்டத்தில் சிறப்பு அந்தஸ்து வேண்டும்’ – ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை

தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ், ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட், பிரதமர் நரேந்திர மோடியிடம் இன்று (நவம்பர் 13) வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆயுஷ் திட்டத்தில் நாட்டில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு வசதிகளை ராஜஸ்தான் கொண்டுள்ளதாகவும் மாநிலத்தில் 5,000 ஆயுஷ் மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்று ‘தி இந்து’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான் : நீண்ட போராட்டத்திற்கு பின் குஜ்ஜார் மக்களுக்கு இட ஒதுக்கீடு

நேற்று (நவம்பர் 12) 5-ஆவது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐடிஆர்ஏ) மற்றும் ஜெய்ப்பூரில் தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆகியவற்றை பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்துள்ளார்.

அப்போது பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட், “ராஜஸ்தான்தான் நாட்டில் மிகப்பெரிய ஆயுஷ் திட்டத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கிறது. எனவே, தேசிய ஆயுஷ் மிஷனின் கீழ் ராஜஸ்தானுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். இது ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனத்திற்கு (என்ஐஏ) நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்க மாநில அரசிற்கு உதவும்” என்று வலியுறுத்தியுள்ளதாக ‘தி இந்து’ கூறியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மாசோதாக்கள் – ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல்

நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுவதன் மூலம் ஆயுர்வேத, யோகா மற்றும் இயற்கை மருத்துவங்களான யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) போன்றவற்றுக்கான ஆராய்ச்சிகளும் சர்வதேசப் பார்வைகளும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அசோக் கெஹ்லோட் பரிந்துரைத்துள்ளார். ஆயுர்வேத மருந்துக்கடைகளில் மருந்தாளர்கள் இருப்பது கட்டாயமாக்க வேண்டும் என்றும் மத்திய ஆயுஷ் நர்சிங் கமிஷனை நிறுவ வேண்டும் என்றும் கூறியுள்ளதாக ‘தி இந்து’  தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்கள் – ராஜஸ்தானிலும் நிறைவேற்றம்

மேலும், நாடி அறிவியல் வளர்ச்சி, யோகா மற்றும் இயற்கை மருத்துவங்களுக்கான மத்திய கவுன்சில் அமைத்தல் போன்றவற்றையும் பரிந்துரைத்துள்ளார்.

கடந்த மே மாதம், சித்த மருத்துவர் தணிகாசலம் சமூக ஊடகங்களில் கொரோனா மருந்து கண்டுபிடித்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை தமிழக அரசு புறக்கணிப்பதாகவும் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தணிகாசலத்தைக் கடந்த மே மாதம் 6ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

`சித்த மருத்துவத்திற்கு மத்திய, மாநில அரசு என்ன செய்தது?’- உச்ச நீதிமன்றம்

அந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற அமர்வு விசாரணை செய்து வந்தது. அதில், இந்தியாவில் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்காதது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மற்ற மருத்துவ முறைகளைப் போன்று இந்திய மருத்துவ முறையையும் சமமாக ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்