தமிழகத்தின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில்
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அதற்கான ஒப்புதல் பெற கால தாமதம் ஆகி வருகிறது ஆளுநர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார்.இந்நிலையில், விரைந்து ஒப்புதல் அளிக்க கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதற்கு பதிலளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இதுகுறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவை என்றும், தன்னை சந்தித்த தமிழக அமைச்சர்களிடமும் இதையேதான் தெரிவித்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு தமிழகத்தில் இருக்கும் ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
இந்த பிரச்சனை குறித்து நேற்று அறிக்கை விட்டிருந்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவு என்பது முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டு ”இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து- கார்ப்பரேட் பாணி கோச்சிங் சென்டர்களில் பயின்று – ஒருமுறைக்கு இருமுறை மூன்று முறை நீட் தேர்வு எழுதினால்தான் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதால் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகிவிட்டது.” என்ற தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் இந்த பிரச்சனை தினம்தோறும் புதுப்புது வடிவங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு என முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர், புதுச்சேரி மாநிலத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் 7.5 சதவிகித ஒதுக்கிடு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது போல, புதுச்சேரி மாநிலத்திலும் நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துயப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு நடந்த அமைச்சரவை கூட்டம் பற்றி பேசிய புதுச்சேரியின் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாகவும், இந்த ஆண்டே இதனை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தித்துள்ளார்.
”நீட் தேர்வை எழுதிய புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களில் 16 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் தனியார் பள்ளி மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் . எனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்க முடிவெடுத்துள்ளதாக” புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.