Aran Sei

கொரோனா தடுப்பூசி பாதிப்பினால் 180 பேர் மரணம் – தடுப்பூசி பாதிப்புகளை கண்காணிக்கும் குழு அறிக்கை

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பின்னர் 617 பேர் தடுப்பூசியினால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகத் தடுப்பூசி பாதிப்புகளை கண்காணிக்கும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 29 அன்று நடந்த தடுப்பூசி பாதிப்புகளைக் கண்காணிக்கும் குழுவின் கூட்டத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மார்ச் 29 வரை தடுப்பூசி பாதிப்பினால் நாடுமுழுவதும் 180(29.2%) பேர் மரணமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட 236 பேர்குறித்த முழுமையான ஆவணங்கள் மட்டுமே உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுவதாக தி இந்து செய்தி கூறுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட 492 பேர் குறித்த விவரங்களை ஏ.இ.எப்.ஐ குழுவின் தொழில்நுட்ப பிரிவு கண்டறிந்துள்ளதாகவும், இதில் 124 இறப்புகளும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட 305 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நிலையில் உள்ளதாகவும் அக்குழு கண்டறிந்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

மாவட்ட வாரியாகப் பாதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரங்கள் கண்டறியறியப்பட்டுள்ளதாக ஏ.இ.எப்.ஐ செயலகம் தெரிவித்துள்ளதாக தி இந்து  செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரனோ தடுப்பூசியால் பாதிக்கப்பட்டு இறந்த 124 பேரில் 12% பேரில் மாரடைப்பாலும் , 51% பேர் குறை ரத்த அழுத்த பாதிப்புகளால் இறந்துள்ளதாகவும் ஏ.இ.எப்.ஐ குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள பொது சுகாதார ஆய்வாளர் மாலினி ஐசோலா , “இறந்தவர்களில் பத்தில் 6 பேருக்கு உடல் கூறாய்வு நடத்தப்படவில்லை ” என்று தெரிவித்துள்ளதாகவும்தி இந்து  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் , ஏ.இ.எப்.ஐ யின் ஆய்வு இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும் , கீழ் மட்ட அளவில் திரட்டப்படும் சான்றுகள் போதுமான அளவில் இல்லை என்றும் டெல்லியை சேர்ந்த பொது சுகாதார ஆய்வாளர் மாலினி ஐசோலா தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்