Aran Sei

இரண்டு கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட மருத்துவருக்கு கொரோனா – தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை

த்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள காந்தி அரசு மருத்துவக் கல்லூரியின் மூத்த மருத்துவர் ஒருவருக்கு, இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

48 வயதான மருத்துவரை பற்றி நெருங்கிய நண்பர்கள் கூறுகையில், இரண்டாவது கட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பின் முக கவசம் அணியத் தேவையில்லை என்று அவர் நம்பினார் என்றும் அதனால் அடிப்படை தொற்று தடுப்பு நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டதால் கூடத் தொற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்பூசி எடுத்துக்கொண்டவருக்கு மீண்டும் கொரானா: எதிர்கட்சிகளின் விமர்சனத்தை மெய்ப்பிக்கிறதா கொரோனா மருந்து.

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியின் முதற்கட்ட ஊசியை ஜனவரி 16 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட ஊசியை மார்ச் 1 ஆம் தேதியும் செலுத்திக்கொண்டுள்ளார்.

மார்ச் 10 ஆம் தேதி, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவருக்குத் தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து, 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி மரணங்கள், பக்க விளைவுகள் – காரணம் என்ன?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, “இந்தியாவில் தற்போது இரு கொரோனா தொற்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. விரைவில் மேலும் 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். நம் நாட்டு மக்களை மட்டும் காப்பாற்றாமல், 100க்கும் மேற்பட்ட நாடுகளின் மக்களைக் காக்க அது பயன்படும்.” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்