Aran Sei

ஒற்றை டோஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி – இந்தியாவில் சோதனை மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பம்

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய அரசிடம் அந்நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், ருஷ்யாவின் ஸ்புட்னிக்  தடுப்பூசியைப் பயன்படுத்தவும் அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்,  ஒரே டோஸில் ஒருமுறை மட்டும் செலுத்தத்தக்க கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்தத் தடுப்பூசி பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஒவ்வாமை உள்ளவர்கள் கோவிஷீல்ட் மருந்தை எடுக்கக்கூடாது: சீரம் இந்தியா நிறுவனம்

இதற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் முறையான அனுமதி பெறவேண்டும். அதன் பொருட்டு, இந்தியாவில் 3-ம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்வதுடன் இறக்குமதி உரிமம் பெறுவதற்காகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் ஜான்சன் அண்டு ஜான்சன் விண்ணப்பித்துள்ளது.

நேற்று (ஏப்ரல் 19), மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 18 வயதிற்கு மேல் உள்ள யார் வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் கோவாக்சினை எடுத்துக்கொள்ள வேண்டாம் – பாரத் பயோடெக் நிறுவனம் வேண்டுகோள்

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. கடந்த ஜனவரி 3-ம் தேதி, கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை முழுமையாக முடிவடைவதற்கு முன்னரே,  மத்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் அந்த மருந்துககு அனுமதி வழங்கியிருந்தது.

இது தொடர்பாக  பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி உட்பட பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்