Aran Sei

ஜோ பைடனின் படையில் இன்னொரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்

ந்திய-அமெரிக்க வம்சாவளி மருத்துவரான டாக்டர் விவேக் மூர்த்தி, அமெரிக்க கொரோனா தடுப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன், திங்கள் கிழமை அறிவிக்கப்பார் என்று ‘தி வயர்’  இணையதளம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு: குவியும் தலைவர்களின் வாழ்த்துகள்

கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட 43 வயதான விவேக் மூர்த்தி, இங்கிலாந்தில் பிறந்தவர்.  2014-ஆம் ஆண்டு அமெரிக்காவின் 19 வது சர்ஜன் ஜெனரலாக, தனது 37-வது வயதில், அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை வகித்த குறைந்த வயதுடையவர் இவர் தான். பின்னர் அவரை டிரம்ப் நிர்வாகம் பதவி விலகச் சொன்னதாக  ‘தி வயர்’ கூறியுள்ளது.

நன்றி : Pool/Getty Images

நேற்று இரவு டெலாவேர் மாகாணம் வில்மிங்டனில், தனது வெற்றி உரையை ஜோ பைடன் நிகழ்த்தினார். “வரும் திங்கள்கிழமை, ‘பைடன்-ஹாரிஸ் கோவிட்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதை ஒரு செயல் வரைபடமாக மாற்ற உதவவுள்ள முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் குழுவை அறிவிக்க உள்ளேன். இந்த திட்டமானது ஜனவரி 20, 2021 அன்று தொடங்குகிறது. ” என்று கூறியுள்ளார்.

`நான் முதல் பெண்தான்; கடைசிப் பெண்ணல்ல’ – வெற்றிக்குப் பின் கமலா ஹாரிஸ்

முன்னாள் சர்ஜன் ஜெனரலான டாக்டர் விவேக் மூர்த்தி மற்றும் முன்னாள் உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் டேவிட் கெஸ்லர் ஆகியோர் இணைந்து செயல்படுவார்கள் என்று ’வாஷிங்டன் போஸ்ட்’ கூறியுள்ளது. மேலும், சில தினங்களில் இதன் முதல் கூட்டம் நடைப்பெற உள்ளது.

தனது வெற்றி உரையில் பேசிய பைடன், இந்தத் திட்டம் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இரக்கம், பாசம் மற்றும் அக்கறை ஆகியவற்றால் கட்டமைக்கப்படும் என்றும், இந்தத் தொற்றுநோயைத் அழிக்க நான் எந்த முயற்சியையும் அர்ப்பணிப்பையும் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிசின் கருப்பின வேர்கள்

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது,  பொது சுகாதாரம் மற்றும் கொரோனா தொற்றுப் பிரச்சனைகள் குறித்துப் பைடனின் உயர்மட்ட ஆலோசகர்களில் ஒருவராக விவேக் மூர்த்தி உருவெடுத்திருந்தார். அவர் பைடன் நிர்வாகத்தில் சுகாதார செயலாளராக நியமிக்கப்படுவார் என்று பலர் நம்புகிறார்கள் என்று ‘தி வயர்’ குறிப்பிட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில், ஜனநாயகக் கட்சியில் உள்ள பிரமிலா ஜெயபால் மற்றும் விவேக் மூர்த்தி ஆகியோரைச் சுகாதாரப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களாகப் பைடன் பிரச்சாரக் குழு நியமித்துள்ளது என்று மேற்கோள்காட்டியுள்ளது.

ஜோ பைடன் ஒரு போர்க் குற்றவாளியா?

கடந்த செப்டம்பர் மாதம், இந்திய-அமெரிக்கர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிதி திரட்டல் நிகழ்ச்சியில் பைடன் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது பேசிய விவேக் மூர்த்தி, “ஜோ பைடனை, என் அம்மா மற்றும் அப்பாவுடன் இரவு உணவிற்கு வீட்டிற்கு அழைத்து வர விரும்புகிறேன். எங்கள் வீட்டில் அவருக்கு மசாலா தோசை வழங்கப்படும்” என்று கூறியுள்ளதாக ‘தி வயர்’ தெரிவித்துள்ளது.

”அவர் உண்மையானவர், நேர்மையானவர். அதற்காக அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் மனதில் இருப்பதை பேசுபவர். ”என்று விவேக் மூர்த்தி கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

மற்றொரு நிதி திரட்டல் நிகழ்ச்சியில், புலம்பெயர்ந்தோர் மற்றும் இந்திய-அமெரிக்கர்கள் போன்ற சமூகங்களுக்கு, பைடன் வழங்கியுள்ள அங்கீகாரத்தையும் பாராட்டையும் விவேக் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அமெரிக்காவின் பொருளாதார முதுகெலும்பின் முக்கியமான பகுதியாக அந்தச் சமூகங்கள் உருவாகி வருவதாகப் பைடன் கருதுவதையும் மேற்கோள்காட்டியுள்ளார் என்று ‘தி வயர்’ தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு, மத்திய சீன நகரமான வுஹானில் தோன்றிய கொரோனா தொற்று நோயின் காரணமாக, தற்போது உலகின் மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்