Aran Sei

‘ஒரே நாளில் 25 ஆயிரம் புதிய கொரோனா தொற்றுகள்; குறையும் இறப்பு விகிதம்’ – அமைச்சகம் தகவல்

ன்று (மார்ச் 14), இந்தியாவில் 25,320 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையானது கடந்த 84 நாட்களில் அதிகபட்ச ஒருநாள் எண்ணிக்கையாகும்.

இதன் வழியாக, பதிவாகியுள்ள மொத்த தொற்று எண்ணிக்கையானது 1,13,59,048 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடைசியாக, கடந்த டிசம்பர் 20 அன்று 26,624 புதிய தொற்றுகள் பதிவாகியதே அதிகபட்ச ஒருநாள் எண்ணிக்கையாக இருந்தது.

இன்று காலை வரையிலான அமைச்சகத்தின் தகவல்படி, இன்று 161 பேர் தொற்றால் உயிரிழ்ந்துள்ளனர். இதன்வழி, மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,58,607 ஆக அதிகரித்துள்ளது. இந்த இறப்பு எண்னிக்கையானது கடந்த 44 நாட்களில் அதிகபட்சமாகும்.

ஞாயிறு முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு – கொரோனா பரவலைத் தடுக்க மத்திய பிரதேசம் முடிவு

தற்போது, நாட்டில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை, 2,10,544 ஆக அதிகரித்துள்ளது. இது பதிவாகியுள்ள மொத்த தொற்றுநோய்களில் 1.85 சதவீதமாகும்.

அதேநேரம், தொற்றிலிருந்து மீள்பவர்களின் விகிதம் 96.82 சதவீதத்திலிருந்து 96.75 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தற்போது, தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,09,89,897 ஆக உள்ளது. மறுபறம், இறப்பு விகிதம் 1.40 சதவீதமாக உள்ளது என்று அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்