Aran Sei

‘கொரோனா மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறையுங்கள்’ – மத்திய அரசிடம் சத்தீஸ்கர் முதல்வர் வலியுறுத்தல்

கொரோனா தொற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 8), கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பிரதமர் மோடியின் முதல்வர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் இக்கோரிக்கைகளை, பூபேஷ் பாகேல் முன்வைத்துள்ளார் என்று மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை’ – .தடுப்பூசி மையங்களை மூடும் மகாராஷ்டிரா, ஒடிசா அரசு

அக்கூட்டத்தில், கொரோனா தொற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ள அவர், இதன் வழியாக கொரோனா தொற்று நோயாளிகளின் நிதிச் சுமையைக் குறைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேவையான தடுப்பூசிகளை ஒரு வாரம் முன்னமே மத்திய அரசு மாநில அரசுகளிடம் கையளித்தால், தொலைதூர மாவட்டங்களிலும் எவ்வித தட்டுப்பாடுகளுமின்றி சுமூகமாக தடுப்பூசிகளை மக்களுக்கு விணியோகிக்க வழங்க முடியும் என்று  பூபேஷ் பாகேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்