Aran Sei

57 பிரேதப் பரிசோதனையில் ஒரே முடிவுகள் – உயர் நீதிமன்றம் அதிர்ச்சி

Image Credits: Wikipedia

2019-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை மதுரை அரசு ராசாசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பதிவுகளின்படி அங்கு 178 பிரேதப் பரிசோதனைகள் நடந்தன. அதில் 57 பிரேதப் பரிசோதனைகளில் ஒரே முடிவுகள் வந்தாக ‘டிடி நெக்ஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த 178 பிரேதப் பரிசோதனைகளில் 57 வெவ்வேறு வழக்குகள் (சாலை விபத்து, கொலை, விஷம் போன்றவை) இருந்தன. அவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கண்டுபிடிப்புகளைக் கொண்டிருந்தன – முந்தைய அறிக்கைகளிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டிருந்ததாக இச்செய்தி குறிப்பிடுகிறது.

உடல்களில் அடையாளங்கள் பற்றிய விவரங்கள் கூட வெட்டப்பட்டு அறிக்கையில் ஒட்டப்பட்டிருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.

“அந்தச் சான்றிதழ்களை ஆராய்ந்ததில் நான்கு வெவ்வேறு நபர்களின் அடையாளங்கள் ஒரே மாதிரியானவை (அதாவது) இறந்த நபர்கள் வெவ்வேறு என்றாலும் (i) இடது பக்க மார்பில் கருப்பு மச்சம் (ii) வலது பக்க அடிவயிற்றில் கருப்பு மச்சம்,” ஒன்று போல இருந்ததை நீதிமன்றம் கவனித்துள்ளது.

மதுரை மருத்துவக்கல்லூரியின் பதிவுகளிலிருந்து கிடைத்த மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், அதிகமான மருத்துவர்கள் பணியில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், ஒரே நாளில் ஒரே ஒரு மருத்துவர் 10 க்கும் மேற்பட்ட பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்டார் என்பதுதான்.

ஒரு மருத்துவர் ஒரு நாளில் 10 முதல் 17 வரை பிரேதப் பரிசோதனை செய்ய இயலாது என்பதால், மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனைகளை விஞ்ஞானரீதியாக நடத்தவில்லை என்று மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகளை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு அட்டவணை நெடுவரிசை குறிப்பிடுகிறது.

“சான்றிதழ்களில் மிகக் குறைவான கண்டுபிடிப்புகள் மட்டுமே வேறுபட்டன. மேலும், சிசிடிவி காட்சிகளின்படி இந்த உடல்களில் எந்த அளவீடுகளும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த 57 பிரேதப் பரிசோதனை சான்றிதழ்கள் அனைத்தும் வெட்டி ஒட்டப்பட்டன என்பது தெளிவாகிறது,” என்று நீதிபதி என்.கிருபாகரன் மற்றும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வின் சமீபத்திய உத்தரவு குறிப்பிட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது தமிழக மருத்துவக்குறியீட்டைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், பிரச்சினைகள் மற்றும் மறு பிரேதப் பரிசோதனைகளைத் தவிர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பிரேதப் பரிசோதனைகளின் போது காணொலிப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் ஆர்.எம்.சுவாமிநாதன் அளித்த மனுவில் தீர்ப்பளிக்கும் பொது நீதிமன்றம் இதைக் குறிப்பிட்டிருந்தது.

மருத்துவ சட்ட வழக்குகளில் பிரேதப் பரிசோதனைச் சான்றிதழ்கள் மிக முக்கியமானது என்றும் இதில் நம்பகத்தன்மை இல்லாவிட்டால் அது நாட்டில் குற்றவியல் நீதி வழங்கும் முறையைச் சிதைக்கும் என்றும் இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த கே.லோகநாதன் மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரியிலிருந்து ஜெ.ரமேஷ் ஆகிய இருவரும் உயர் அதிகாரிகளின் மிரட்டல்களையும் மீறி நீதிமன்றத்தில் உண்மையைத் தைரியமாக வெளியே கொண்டு வந்தனர் என்றும் குறிப்பிட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்