Aran Sei

கொரோனா தடுப்பூசி மரணங்கள், பக்க விளைவுகள் – காரணம் என்ன?

கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் வேகமாக அமல்படுத்தப்பட்டு இது வரை நாடு முழுவதும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

சென்ற சனிக்கிழமை தடுப்பூசி போடப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியுடன் தொடர்பில்லாத இருதய நுரையீரல் பிரச்சினைகளால் அவர்கள் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

580 பேருக்கு தடுப்பூசி போட்ட பிறகான எதிர்மறை நிகழ்வுகள் ஏற்பட்டன என்றும் யாருக்குமே மோசமான எதிர்மறை விளவுகள் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

52 வயதான மஹிபால் சிங் மொராதாபாத் அரசு மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த நாள், சென்ற ஞாயிற்றுக் கிழமை, உயிரிழந்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட நபர் 24 மணி நேரத்திற்குள் மரணம் : காரணம் என்ன?

43 வயதான நாகராஜூ கர்நாடகாவின் பல்லாரியில் மாநில சுகாதாரத் துறை ஊழியர். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று மரணமடைந்துள்ளார்.

நாகராஜுவின் இறப்புக்குக் காரணம் இருதய நுரையீரல் முடக்கமுத்துடன் கூடிய முன்சுவர் இரத்த அடைப்பு என்று சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் மனோகர் அக்னானி கூறியுள்ளார்.

ஐரோப்பாவின் நார்வே நாட்டில் ஃபைசர் நிறுவனம் தயாரித்த mRNA தடுப்பூசி போடப்படுகிறது. மாறாக, இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்ட்/அஸ்ட்ராஜெனக்கா தயாரித்த ஒன்றும், இந்தியாவின் பாரத் பயோடெக் தயாரித்த ஒன்றும் என இரண்டு நோய்க்கிருமி அடிப்படையிலான தடுப்பூசிகள் போடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நார்வே நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

நார்வே நாட்டில் உயிரிழந்தவர்கள் 80 வயதுக்கு மேற்பட்ட பலவீனமானவர்கள் என்று புளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்த மிக வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பு மருத்துவர்கள் கவனமாக முடிவெடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நார்வேயில் 21 பெண்களுக்கும் 8 ஆண்களுக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இறந்தவர்களைத் தவிர 9 பேருக்கு மோசமான பக்க விளவுகளும் 7 பேருக்கு அவ்வளவு மோசமில்லாத பக்க விளைவுகளும் ஏற்பட்டுள்ளன என்று நார்வீஜிய மருந்து கழகம் கூறியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போர் – பாலஸ்தீனியர்களுக்கு தடுப்பூசியை மறுக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 23 பேருக்கு முக முடக்கம் ஏற்பட்டுள்ளது என்று WION செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் கடந்த டிசம்பர் 20-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதுவரை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 72 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்