Aran Sei

கொரோனா தடுப்பு மருந்து – அவசர அங்கீகாரத்துக்கான விண்ணப்பம்

கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த மடெர்னா நிறுவனம் அவசர அங்கீகாரத்துக்கு திங்கள் அன்று விண்ணப்பித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துகள் சோதனை முடிவுகள் – விலை கட்டுப்படியாகுமா?

அதன் இறுதிக் கட்ட பரிசோதனைகளின் இறுதி முடிவுகள் எந்த விதமான மோசமான பின்விளைவுகளும் இல்லாமல் 94.1% செயல்திறன் கிடைத்ததை உறுதி செய்ததை தொடர்ந்து மடெர்னா இந்த பதிவை செய்துள்ளது. இந்தக் கோரிக்கையை விவாதிக்க டிசம்பர் 17-ம் தேதி ஒரு பரிந்துரை குழு சந்திக்கவுள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் கூறியுள்ளது.

ஃபைசர் நிறுவனமும் பயோஎன்டெக்கும் இணைந்து தயாரித்த, பரிசோதனைகளில் 95% செயல்திறன் கொண்டிருந்த தடுப்பு மருந்து தொடர்பாக வெளி நிபுணர்களின் பரிசீலனை இதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு நடைபெறவுள்ளது. ஆலோசனை குழுக்கள் தமது பரிந்துரைகளை வழங்கிய பிறகு உணவு மற்றும் மருந்து ஆணையம் அவசர பயன்பாட்டு அதிகாரத்தை வழங்குவது குறித்து முடிவு எடுக்கும் என்று ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

மடெர்னாவின் மருந்து பரிசோதனையில் கலந்து கொண்ட 30,000 தன்னார்வலர்களில் 185 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் 185 பேருக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்படாமல், பதிலி மருந்து கொடுக்கப்பட்டிருந்தது. தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்களில் 11 பேருக்கு மட்டுமே நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், மிக மோசமான நோய்த்தொற்று ஏற்பட்ட 30 பேரும் தடுப்பு மருந்து கொடுக்கப்படாதவர்கள் என்பதால் மோசமான நோய்த்தொற்றை தடுப்பதில் தன்னுடைய தடுப்பு மருந்து 100% செயல்திறன் உடையதாக மடெர்னா தெரிவிக்கிறது.

பரிசோதனையில் ஏற்பட்ட 196 நோய்த்தொற்றுகளில், 33 பேர் 65 வயதுக்கு அதிகமானவர்கள், 42 பேர் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள். 29 லத்தீன் அமெரிக்கர்கள், 6 கருப்பினத்தவர்கள், 4 ஆசிய அமெரிக்கர்கள், 3 பல இன பங்கேற்பாளர்கள் என்றும், பரிசோதனையின் போது நிகழ்ந்த ஒரே ஒரு இறப்பு தடுப்பு மருந்து கொடுக்கப்படாதவர்கள் மத்தியில் நடந்தது என்றும் மடெர்னா கூறியுள்ளது.

இந்தத் தடுப்பு மருந்து ஒரு சில பங்கேற்பாளர்களுக்கு ஃபுளூ போன்ற நோய் அறிகுறிகளை ஏற்படுத்தியது, இவ்வளவு வலு வாய்ந்த தடுப்பு மருந்து இதை ஏற்படுத்துவது இயல்பானதே என்று மடெர்னா கூறியுள்ளது. ஆனால், குறிப்பிடத்தக்க பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் எதையும் இதுவரை பரிசோதனையில் ஏற்படவில்லை என்று மடெர்னாவின் முதன்மை மருத்துவ அலுவலர் தால் சாக்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு விண்ணப்பிப்பதோடு கூடவே, ஐரோப்பிய ஒன்றியத்திலும் விண்ணப்பிக்கப் போவதாக மடெர்னா கூறியுள்ளது.

ஏழை நாடுகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து – சோதனையில் தற்செயலாகக் கிடைத்த வெற்றி

இந்த ஆண்டு இறுதிக்கும் 2 கோடி முறை கொடுப்பதற்கா தடுப்பு மருந்துகளை அமெரிக்கா முழுவதும் அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக மடெர்னா கூறுவதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. இதைப் பயன்படுத்தி 1 கோடி பேருக்கு தடுப்பு மருந்து வழங்க முடியும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்