Aran Sei

’மேலும் இரு கொரோனா தடுப்பூசி; தற்சார்பு சுகாதாரத்திற்கு ரூ.64 ஆயிரத்து 180 கோடி நிதி’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ற்போது இரு கொரோனா தடுப்பூசிகள் இருக்கும் நிலையில் மேலும், இரு தடுப்பூசிகள் வர உள்ளன என்றும் தற்சார்பு சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.64 ஆயிரத்து 180 கோடி ஒதுக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “இந்தியாவில் தற்போது இரு கொரோனா தொற்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. விரைவில் மேலும் 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். நம் நாட்டு மக்களை மட்டும் காப்பாற்றாமல், 100க்கும் மேற்பட்ட நாடுகளின் மக்களைக் காக்க அது பயன்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் – சில முக்கியமான சொற்கள்

“இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உலகிலேயே மிகக்குறைவாகும். இந்த 2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டில், சுகாதாரம், உடல்நலம், நிதி முதலீடு, கட்டுமானம், முழுமையான வளர்ச்சி, மனிதவளத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட 6 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று  தடுப்பூசிக்காக 2021-22 ஆம் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் தேவைப்பட்டால் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், புதிதாகத் தற்சார்பு சுகாதாரத் திட்டம் கொண்டுவரப்பட்டு, அத்திட்டத்துக்காக ரூ.64,180 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்