மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் மற்றும் வாரிய குழு உறுப்பினர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் கோட்ச், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வாரிய குழு உறுப்பினர்கள் பட்டியலில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய் அறுவை சிகிச்சையியல் துறையின் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் பெயரும் இடம் பெற்றுள்ளது.
முன்னதாக, கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறினால் சுப்பையா சண்முகம், அருகில் வசித்து வந்த வயதான பெண்மணியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
இதனிடையே, சண்முகம் எய்ம்ஸ் வாரியக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் மகளிரணிச் செயலாளர் எம்.பி கனிமொழி, “வயதான பெண்மணியை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் சண்முகம் சுப்பையா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
Is this an endorsement of indecent behaviour and also an incentive for other BJP cadres to follow suit? pic.twitter.com/E8ViIMOl6a
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 28, 2020
மேலும் “இது அநாகரீகமான நடத்தைக்காக வழங்கப்பட்டுள்ள அங்கீகாரமா? அல்லது மற்ற பாஜக உறுப்பினர்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக அளிக்கப்படும் ஊக்குவிப்பா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இதுகுறித்து ட்விட்டரில், “ஒரு பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து, அவரிடம் ஆபாசமாக அறுவெறுப்பாக நடந்துகொண்ட பிஜேபியின் சண்முக சுப்பையாவை, மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லூரி உறுப்பினராக நியமித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.” என பதிவிட்டுள்ளார்.
ஒரு பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து,அவரிடம் ஆபாசமாக அறுவெறுப்பாக நடந்துகொண்ட பிஜேபியின் சண்முக சுப்பையாவை,மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லூரி உறுப்பினராக நியமித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. பெண்களை,மருத்துவத்துறை இதை விடவும் யாரும் இழிவு படுத்திவிடமுடியாது.
— Jothimani (@jothims) October 28, 2020
பெண்களையும் மருத்துவத்துறையும் இதை விடவும் யாரும் இழிவு படுத்திவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “பிஜேபியில் பதவிகளைப் பெறுவதற்கு அடிப்படைத்தகுதியே பெண்களிடம் இழிவாக நடந்துகொள்வதுதானா?” என்றும் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் எய்ம்ஸ் மருத்துவமனை வாரியக் குழு உறுப்பினராக சண்முகம் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்ணை துன்புறுத்திய குற்றச் சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம்: இது பெண்களை அவமதிப்பதில்லையா? pic.twitter.com/SlZiOdV6ei
— Dr Ravikumar M P (@WriterRavikumar) October 28, 2020
மதுரையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “தோப்பூரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ABVP அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் செய்த இழிவு செயலுக்காக கொடுக்கப்படும் பரிசா?” எனக் கேட்டுள்ளார்.
தோப்பூரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ABVP அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் செய்த இழிவு செயலுக்காக கொடுக்கப்படும் பரிசா?
மதுரையில் எய்ம்ஸ் அமையவேண்டும் என்பது எங்களது கால் நூற்றாண்டு கனவு மற்றும் போராட்டம்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 28, 2020
தொடர்ந்து, “மதுரையில் எய்ம்ஸ் அமையவேண்டும் என்பது எங்களது கால் நூற்றாண்டு கனவு மற்றும் போராட்டம். அதனை நிறைவேற்றும் பொறுப்பை தளராத வேகத்தோடு பணியாற்றி கொண்டுவந்து சேர்ப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத்துகுள்ளேயும், வெளியேயும் எங்களின் பணி வீரியத்தோடு தொடரும்.” என்று சு.வெங்கடேசன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.