Aran Sei

குறைந்த, நடுத்தர வருமான நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி – மருந்து நிறுவனங்கள் நம்பிக்கை

Credits Scroll

இந்தியா, பங்களாதேஷ், சீனா, மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள 18 மருந்து உற்பத்தி நிறுவனங்கள், குறைந்த மற்றும் நடுத்தர நாடுகளுக்கான கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஒன்றிணைந்துள்ளன.

இந்த மருந்து நிறுவனங்கள் Medicines Patent Pool (எம்பிபி) என்ற அரசு சாராத அமைப்பின் கீழ் இணைந்துள்ளதாக அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சன் பார்மா, லூபின், ஆரோபிந்தோ, ஜைடஸ் காடிலா, ஹெடெரோ, நாக்டோ மற்றும் ஸ்ட்ரைட்ஸ் ஷாசன் ஆகிய ஏழு நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.

இதுகுறித்து எம்பிபி அமைப்பின் நிர்வாக இயக்குநர் சார்ல்ஸ் கோரே, “மருந்து உற்பத்தியில் போட்டியாளர்களான இந்த 18 நிறுவனங்கள் அளித்துள்ள ஒத்துழைப்பு, எல்லோருக்கும் மருந்து கிடைக்கச் செய்யும் எங்களுடைய முயற்சிக்கும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

 

உலகின் மருந்து உற்பத்தியாளர்களில் பெரும் பகுதியாக இருக்கும் இந்த 18 நிறுவனங்களும் குறைந்த, நடுத்தர வருமான நாடுகளிலுள்ள மக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஒன்றாக இணைந்து செயல்படுவதாக உறுதி அளித்துள்ளார்கள் எனச் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அதிகரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் தேவைக்கேற்ப உற்பத்தித் திறனை அதிகரித்து உலகின் பிற மருந்து நிறுவனங்களும் இந்த முயற்சியில் இணைய வேண்டும் என அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தரமான மருந்துகளின் உற்பத்தி, விநியோகத்தில் எங்களுக்கு உள்ள நீண்டகால அனுபவத்தின் மூலம், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பங்களிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்று மருந்து நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.

“வெளிப்படைத்தன்மையுடன் அணுகுவதாலும் கூட்டு முயற்சியாலும், எங்களுடைய தனிப்பட்ட உற்பத்தித் திறன்களின் கூட்டுத்தொகையை விடவும் அதிகமாகவே உற்பத்தி செய்ய முடியும்.” எனவும் நிறுவனங்கள் கூறியதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்